காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. ஈரோடு அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஈரோடு அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலை- வீடியோ

  ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஈரோடு அருகே இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

  ஈரோடு அருகேயுள்ள சித்தோடையை சேர்ந்த தர்மலிங்கம் என்ற 24 வயது இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வீட்டு சுவற்றில் எழுதி வைத்துவிட்டு, தர்மலிங்கம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  Youth committed suicide near Erode

  இவர் பொம்மை வியாபாரம் செய்து வந்தவராகும். அதிகாலையில் தீக்குளித்த தர்மலிங்கத்தை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், 100 சதவீதம் தீக்காயம் அடைந்த அவரை காப்பாற்ற முடியவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  சமீபத்தில், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரவி என்ற மதிமுக தொண்டர் தீக்குளித்து உயிரிழந்தார். இந்த நிலையில், காவிரிக்காக ஈரோடு அருகே தர்மலிங்கம் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Demanding to set up the Cauvery Management Board, a 24 year old youth committed suicide near Erode.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற