ராஜராஜசோழன் ஆன்மா சாந்தியடைய பெரிய கோயிலில் தியானமா? சின்னப்புள்ளத்தனமா இருக்கே!
Recommended Video

தஞ்சை: ராஜராஜசோழனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்பாடு செய்ததாக ஒரு தகவல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் தஞ்சை பெரிய கோவிலில், தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு மக்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியது. ஹைகோர்ட் மதுரை கிளையில், முத்துகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிமன்றம், ரவி சங்கர் ஏற்பாடு செய்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.

இதனிடையே, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டி என்ற பெயரில், ஒரு பேப்பர் கட்டிங் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
அதில் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஆன்மா சாந்தி அடையவில்லை. அது ரவிசங்கர் குருஜியிடம் உள்ள ஓலைச்சுவடிகள் மூலம் தெரியவந்தது.
அவரது அறிவுரைப்படி பெரியகோயிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்தோம். தியானம் செய்தால் ராஜராஜசோழனின் ஆத்மா சாந்தி அடையும். பெரிய கோவிலில் உள்ள சில குறைபாடுகள் நீங்கும். இவ்வாறு அவர் கூறியதாக அந்த பத்திரிகை செய்தி கூறுவதாக வைரல் போஸ்டில் தகவல் இடம் பெற்றுள்ளது.
அருண்மொழியோட ஆவி கோவிலை சுத்துகிறது!!
— இராசபாளையத்துக்காரன் (@kaleeswaran_18) December 8, 2018
அதை சாந்தி படுத்தவே தியானம்
அடேய் அப்ப கோவில்ல சாமி இல்லைனு நீங்களே சொல்றீங்களாடா😂😂😂 pic.twitter.com/KO7s0X3sDW
இதுகுறித்து சுவாமிநாதனிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோது போன் இணைப்பு கிடைக்கவில்லை. பெரிய கோயிலுக்கு செல்லும் முக்கிய பிரமுகர்களின் பதவி பறிபோவதாக ஒரு மூட நம்பிக்கை உண்டு. இந்த நிலையில்தான், இவ்வாறு ஒரு வைரல் போஸ்ட் சுத்தி வருகிறது. இது பக்தர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications