Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேட்டரே வேறயாம்.. பிஎச்டி மாணவரை சுற்றி வளைத்த சிபிஐ! ஆபாச வீடியோ சம்பவத்தில் வெலவெலத்த தஞ்சை

பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவர் மீது சிறுமிகளை வைத்து ஆபாசப்படம் எடுத்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: பிரதமர் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவர் மீது சிறுமிகளை ஆபாச படம் எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மட்டுமல்லாது இவர் இப்படங்களை சர்வதேச அளவில் ஷேர் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்களம் பகுதி பூண்டிதோப்பை சேர்ந்தவர் சுற்றுச்சூழலியல் துறை பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). இவரது வீட்டிற்கு கடந்த கடந்த 15ம் அதிகாலை 6 மணியளவில் அதிரடியாக புகுந்த சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையை சிபிஐ டிஎஸ்பி சஞ்சய் கவுதம் தலைமையிலான 11 அதிகாரிகள் மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பின்னர் விக்டரை அங்கிருந்து தஞ்சாவூருக்கு அழைத்து சென்றனர்.

சம்பவம் குறித்து பெற்றோர்கள், பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறியிருந்தனர். ஆனால் சிபிஐ விசாரணையில் பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதாவது விக்டர் சிறுமிகளின் ஆபாச படங்களை வெளிநாட்டில் உள்ள நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். சர்வதேச அளவில் குழந்தைகள்/சிறுமிகளின் ஆபாச படங்களை பார்க்கவும், விற்பனை செய்யவும், ஷேர் செய்யவும், தயாரிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளை வைத்து ஆபாச படம்

சிறுமிகளை வைத்து ஆபாச படம்

வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் இதற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கு இன்டர்போல் உறுதுணையாக இருந்து வருகிறது. இன்டர்போல் அதிகாரிகள் இதுபோன்ற ஆபாச படங்களை யாரெல்லாம் பகிர்கிறார்கள் என்பதையும், அதனை யாரெல்லாம் தேடி சென்று பார்க்கிறார்கள் எனவும் கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பு வளையத்தில்தான் விக்டர் சிக்கியுள்ளார். இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆராய்ச்சி மாணவர்

ஆராய்ச்சி மாணவர்

அதாவது, விக்டர் சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியின் ஆபாச படங்களை எடுத்து அதனை அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். மட்டுமல்லாது வெளிநாட்டில் இருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார் என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. எனவே விக்டர் மீது ஐபிசியின் 67B IT Act, pocso Act 2012 - sec 4,6,8,10,12,14 and 17, மற்றும் 120b ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று மதியம் தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு தொடர்பாக இரண்டு நாட்கள் சிறையில் அடைக்கவும் மீண்டும் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 கைது

கைது

தற்போது விக்டர் ராஜா தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விக்டர் போலவே நாடு முழுவதும் சுமார் 21 மாநிலங்களில் சிறுமிகளின் ஆபாச படங்களை அனுப்ப, எடுக்க ஆட்கள் இருப்பது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் ஒரு குழுவாக இயங்கி வருகிறார்கள் என்றும், விரைவில் இக்குழுவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆபாசப்படம் எடுக்க விக்டர் பயன்படுத்திய கேமிரா, லேப்டாப் உள்ளிட்ட கருவிகளையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இன்டர்போல் மாநாட்டில் குழந்தைகளுக்கு எதிரான ஆபாசப்படம் எடுப்பதை தடுப்பது குறித்து தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு இதுபோன்ற ஆபாச படங்கள்தான் முக்கிய காரணியாக இருக்கின்றன என்று உளவியல் நிபுணர்கள் மற்றும், மகளிர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இதுபோன்ற நடவடிக்கைகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என மகளிர் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+