Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பேத்கருக்கு காவி, திருநீறு.. பரபரக்க செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி! பாய்ந்தது குண்டர் சட்டம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரில் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று அவருக்கு காவி உடை, தலையில் திருநீறு போட்டு போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 67 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அந்த நாளில் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அர்ஜுன் சம்பத் படத்தோடு அம்பேத்கர் காவி உடை அணிந்து இருப்பதை போன்றும், அவர் தலையில் திருநீறு, குங்குமம், திருநீறு பூசி இருப்பது போலவும் போட்டோஷாப் செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

சர்ச்சைக்குரிய இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்து மக்கள் கட்சியினர் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை காவல் துறையினர் கிழித்தனர். இருப்பினும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு கடும் கண்டனத்துக்கு ஆளாகின.

காவல் நிலையம் முற்றுகை

காவல் நிலையம் முற்றுகை

அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து இந்து மக்கள் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டியதை கண்டித்தும், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன், மண்டல செயலாளர் விவேகானந்தன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழனி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குருமூர்த்தியை கைது செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

 கைது செய்த போலீசார்

கைது செய்த போலீசார்

இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தியை கும்பகோணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காவல்நிலைய முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சியினருக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

 அர்ஜுன் சம்பத்துக்கு எதிர்ப்பு

அர்ஜுன் சம்பத்துக்கு எதிர்ப்பு

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றார். ஆனால், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த வழக்கறிஞர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து முழக்கமிடமாட்டேன், காவி துண்டு அணிவிக்க மாட்டேன் என நீதிபதியிடம் வாக்குறுதி அளித்து அர்ஜுன் சம்பத் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாக இருந்த கும்பகோணத்தில் அம்பேத்கர் காவி உடை, தலையில் திருநீறு, குங்கமத்தோடு இருப்பதைபோல் போட்டோசாப் செய்த போஸ்டரை ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தி மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்து இருக்கிறது. இதனால் கும்கோணம் கிளை சிறையில் இருந்த குருமூர்த்தி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+