தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் மேயரா? உங்கப் பிள்ளையா? வாங்க சாப்பிடலாம்! ஆதரவற்ற முதியோர்களை நெகிழ வைத்த சன்.ராமநாதன்!

Google Oneindia Tamil News

தஞ்சை: தீபாவளி பண்டிகையை தன் குடும்பத்தினருடன் கொண்டாடாமல் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் கொண்டாடி, அங்கிருந்தவர்களை பாசத்தால் நெகிழ வைத்துள்ளார் தஞ்சை மேயர் சன்.ராமநாதன்.

நான் மேயரா? உங்கப் பிள்ளையா? என ஆதரவற்ற முதியோர்களிடம் சன்.ராமநாதன் வினவிய நிலையில், நீ என் பிள்ளைப்பா என அன்பொழுக கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் முதியோர்கள்.

கேசரி, இட்லி, வடை என தன் கையாலேயே ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு பரிமாறிய தஞ்சை மேயர் சன்.ராமநாதன், அவர்களுக்கு சிறிய தொகை ஒன்றையும் பரிசளித்தார்.

தீபாவளி கலெக்சன் “ஓஹோ”.. 2 நாட்களில் ரூ.464 கோடி மது விற்பனை! மதுரை 'குடி’மகன்கள் “ரெக்கார்டு”

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை அன்று புத்தாடைகள் அணிந்தோமா, குடும்பத்தினர் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்து நேரத்தை செலவிட்டோமா என பல விஐபிக்கள் பொழுதை கழித்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று பிள்ளைகளின் அரவணைப்பு இல்லாமல் வாடும் முதியோர்களிடம் நானும் உங்கள் பிள்ளை தான் எனக் கூறி அவர்களை நெகிழ வைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளார்.

ஆதரவற்ற முதியோர்

ஆதரவற்ற முதியோர்

பிள்ளைகள் வந்து பார்க்கவில்லையே என யாரும் கவலைப்படக் கூடாது என்றும் நான் மேயராக வரவில்லை, உங்கள் பிள்ளையாக வந்திருக்கிறேன் எனவும் கூறி தனது கையாலேயே அவர்களுக்கு தீபாவளி விருந்து வைத்தார். மேலும், ஒரு சிறிய தொகை ஒன்றையும் முதியோருக்கு பரிசளித்தார். பண்டிகை நாளன்று கூட பெற்றப் பிள்ளைகள் எட்டிபார்க்காததால் மிகுந்த மன சஞ்சலத்தில் இருந்த முதியோர்கள், மேயர் சன்.ராமநாதன் வருகையால் கவலையை மறந்தனர்.

சாப்பிட்டு செல்லவும்

சாப்பிட்டு செல்லவும்

கம்பி மத்தாப்பு பட்டாசை ஆசை ஆசையாய் முதியோர்கள் மேயருடன் சேர்ந்து வெடித்தனர். ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருந்து புறப்பட்ட மேயர் சன்.ராமநாதனிடம் அங்கிருந்த மூதாட்டிகள், 'ஏம்பா ஒரு வாய் சாப்பிட்டு போப்பா, மணி என்னாச்சு' என தாய்மைக்கே உரிய அக்கறையோடு உபசரித்தார்கள். தனக்கு அடுத்தடுத்து உள்ள நிகழ்ச்சிகளை காரணம் கூறி அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார் தஞ்சை மேயர்.

உண்மையான மகிழ்ச்சி

உண்மையான மகிழ்ச்சி

புத்தாடைகள் அணிவது, இனிப்புகள், அசைவ உணவுகள் சாப்பிடுவது, புதுப்படம் பார்ப்பது என தீபாவளி அன்று கொண்டாட்டங்கள் களைக்கட்டினாலும் இது போன்ற ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்களில் அவர்களை மகிழ்வித்து மகிழ்வதில் உள்ள ஆனந்தம் வேறு எதற்கும் ஈடாகாது.

English summary
Thanjavur Mayor Sun.Ramanathan celebrated Diwali in a home for the destitute elderly and encouraged the people there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X