கூல்ட்ரிங்ஸில் மிக்சான எலிபேஸ்ட்.. டாட்டா காட்டியே உயிரை விட்ட இளைஞர்.. கதறிய குடும்பம்..காரணம் பைக்
தஞ்சாவூர்: தந்தையிடம் பல முறை பைக் கேட்டும் அவர் வாங்கி தராததால் விரக்தியடைந்த தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் எலி பேஸ்ட தின்று தற்கொலை செய்து கொண்டார்.
மேலும், தான் எலி பேஸ்ட் தின்பதை வீடியோ எடுத்த அந்த இளைஞர், கடைசியாக டாடா காண்பித்துவிட்டு இறந்து போகிறார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பள்ளிப்படிப்பை முடித்ததுமே, பிள்ளைகள் சொந்தக் காலில் நின்று தங்கள் மேல்படிப்பு செலவையும், உணவு தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். ஆனால், கல்லூரி முடித்துவிட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல், தந்தை பைக் வாங்கித் தரவில்லை என்ற கோபத்தில் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களை என்னவென்று சொல்வது?

கூலித்தொழிலாளி மகன்
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் உள்ள பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் வசிப்பவர் கோவிந்தராஜ் (56). கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு நந்தகுமார் (22) என்ற மகன் இருக்கிறார். தான் கஷ்டப்பட்டாலும் மகனுக்கு வீட்டுக் கஷ்டம் தெரியாமல் வளர்த்துள்ளார் கோவிந்தராஜ். தனது சக்தியை மீறி தனியார் பள்ளியிலும், பின்னர் கல்லூரியிலும் மகன் நந்தக்குமாரை அவர் படிக்க வைத்துள்ளார்.

எமனாக வந்த "பைக் ஆசை"
கல்லூரி படிப்பை முடித்த நந்தகுமார், வேலைக்கு ஏதும் செல்லாமலும், வேலை தேடாமலும் தனது நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்திருக்கிறார். அவரது நண்பர்கள் அனைவரிடமும் மோட்டார் சைக்கிள் இருந்துள்ளது. நந்தகுமாரிடம் மட்டும் பைக் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பைக் வாங்கித் தரும்படி சமீபகாலமாக தனது தந்தை கோவிந்தராஜிடம் கேட்டு தொந்தரவு செய்து வந்திருக்கிறார் நந்தகுமார்.

"இப்பவே வேண்டும்"
அதற்கு தந்தை கோவிந்தராஜ், "இப்போது என்னிடம் பணம் இல்லை. நிறைய கடன் இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து வாங்கித் தருகிறேன்" என நந்தகுமாரிடம் கூறியிருக்கிறார். ஆனால் இதை ஏற்காத நந்தகுமார், தனக்கு இப்போதே பைக் வேண்டும் எனக் கேட்டு அடம்பிடித்திருக்கிறார். தொடர்ந்து அவரது தந்தை கோவிந்தராஜும், தான் முன்பு கூறிய பதிலையே சொல்லி வந்திருக்கிறார்.

டாடா காண்பித்து வீடியோ
தந்தை பைக் வாங்கி தராததால் விரக்தியின் உச்சிக்கே நந்தகுமார் சென்றிருக்கிறார். பிறகு, பைக் இல்லாத இந்த உலகில் வாழ்வதை விட செத்துவிடலாம் என முடிவு செய்த நந்தகுமார், கடையில் எலி பேஸ்ட் வாங்கியிருக்கிறார். பிறகு அதை கூல்டிரிங்ஸில் கலந்து குடித்துள்ளார். மேலும், இவை அனைத்தையும் அவர் செல்போனில் வீடியோவும் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த வீடியோவில் எலி பேஸ்ட் கலந்த ஜூஸை குடித்து, நந்தகுமார் டாடா காண்பிக்கிறார். இதை பார்த்த அவரது நண்பர்கள், உயிருக்கு போாரடிக் கொண்டிருந்த நந்தகுமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications