காற்றில் பறந்த முழு ஊரடங்கு விதிகள்.. தஞ்சையில் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்!
தஞ்சாவூர்; முழு ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு தஞ்சையில் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்ததால் கொரோனா தொற்று அங்கு தொடர்ந்து உயரும் அபாயம் எழுந்துள்ளது.
கொரோனா தொற்றின் முதல் அலையில் பெரிய அளவில் யாருக்குமே ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படவில்லை. ஆனால் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுபவர்களில் 30 சதசீவதம் அளவிற்கு ஆக்சிஜன் பெட் தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதேபோல் முதல் அலையில் கொரோனா பாதித்து அறிகுறியற்ற நிலையில் 90 சதவீதம் பேருக்கு மேல் இருந்தனர். ஓரளவிற்கே பாதிப்புகள் இருந்து. தீவிர பாதிப்பு இன்னமும் குறைவாகவே இருந்தது.
ஆனால் இந்த நிலையில் பாதிக்கப்படுபவர்களில் பலருக்கு நோய் அறிகுறிகள் வருவதுடன், தீவிர பாதிப்பும் மிக அதிகமாக உள்ளது பலரையும் நாம் இழந்து வருகிறோம். நம் ஒவ்வொருருக்கும் தெரிந்த நண்பர்கள், உறவுகள் என பலரையும் இந்த இரண்டாவது அலை கொரோனாவால் இழந்திருக்கும். ஆனால் இன்னும் பலர் அலட்சியமாக உள்ளனர். ஊரடங்கை கடைபிடிப்பது இல்லை.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவும் மாவட்டங்களில் தஞ்சாவூரும் ஒன்று. இங்கு கொரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5399 ஆக உள்ளது. ஆனால் பலர் கொரோனா பாதிப்பு குறித்து கவலை இல்லாமல் சுற்றுகிறார்கள். தற்போது மளிகை காய்கறி இறைச்சி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கலாம் என விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
தஞ்சையில் கீழவாசல் பகுதியில் இன்று காலை பொருட்களை வாங்க பொதுமக்கள் கூடினர் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது முழு ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு வாகனங்களில் மக்கள் அங்கும் இங்கும் சென்றதால் இதுவே பெறுந்தொற்று பரவலுக்கு காரணமாக அமைந்துவிடும் நிலை உருவாகிறது. எனவே முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications