மத்திய அரசின் 2000 ரூபாய் வேண்டுமா? இன்றே கடைசி நாள்.. உடனே பதிவு பண்ணுங்க!
தஞ்சாவூர்: மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் தரப்படுகிறது. இதற்கு வங்கி கணக்கை ஆதார் உடன் இன்றைக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தி உள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது :- மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ளது. 14- வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் இன்றுக்குள் பதிவு செய்ய வேண்டும். இதை செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதே போல வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14-வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.
முதல் வழிமுறையாக ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் சரிபார்க்கலாம். ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலை தளத்தில ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம்.
இ.கே.ஒய்சி பதிவு செய்திடாத விவசாயிகள் விபரங்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications