தஞ்சை கோவில் அறங்காவலராக இஸ்லாமியர் நியமனம் என்று வதந்தி.. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பாளர் கைது
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள நெடுந்தெரு கிராமத்தில் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதிய அறங்காவலராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரத்தை சேர்ந்த சரவண கார்த்தி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான செய்தி பதிவிட்டதாக கூறப்படுகிறது.. இந்த விவகாரத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பாளரான சரவண கார்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே நெடுந்தெரு கிராமத்தில் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு புதிய அறங்காவலராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரத்தை சேர்ந்த 43 வயதாகும் சரவண கார்த்தி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான செய்தியை பதிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களை பராமரிப்பார்? அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார்?' என்று கூறியிருந்தார். இதை பார்த்து பாஜகவினர் பலர் அரசை கடுமையாக விமர்சித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஹெச்.ராஜா தன் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக அப்போது ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், 'பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை. இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களை பராமரிப்பார்? அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார்?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையடுத்து ராஜகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் கொடுத்துள்ள விளக்கத்தில், 'நர்கிஸ்கான் இந்து மதத்தை சேர்ந்தவர். நர்கிஸ்கானின் தாயார் பிரசவ காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்போது, மருத்துவர் நர்கிஸ்கான் என்பவர் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வயிற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளார். அந்த நன்றியின் அடிப்படையில் அந்த மருத்துவரின் பெயரையே நர்கிஸ்கானுக்கு அவரின் தந்தை தங்கராஜ் பெயராக சூட்டினார். இதுதான், நர்கிஸ்கானின் பெயர் பின்னணி' என்று கூறினார்.
இதனிடையே தன்னை பற்றி வதந்தி பரப்பியவர் குறித்து நர்கிஸ்கான் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அறங்காவலராக நியமிக்கப்பட்ட நபர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக சரவண கார்த்தி என்பவர் தவறான தகவலை பதிவிட்டு இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பதற்றமான சூழ்நிலை உருவாக காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சரவண கார்த்தி என்பதும் சென்னையில் இருப்பதும் தெரிய வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று சரவண கார்த்தியை கைது செய்து அய்யம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சரவண கார்த்தி விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் ஆவார்.












Click it and Unblock the Notifications