தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆண்டிப்பட்டி அருகே பயங்கரம்.. ஆட்டோ - பஸ் மோதல்.. டீ மாஸ்டர் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ்-ஆட்டோ மோதியதில் 4 பேர் பலியானார்கள்.

Google Oneindia Tamil News

மதுரை: ஆண்டிப்பட்டி அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்றாயன் என்ற டீ மாஸ்டரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.

தேனி அல்லிநகரம் கம்போஸ்டு தெருவை சேர்ந்தவர் சென்றாயன். 40 வயதாகிறது. இவருக்கு சுதா என்ற மனைவியும், மணிகண்டன் என்ற 9 வயது மகன், அபிநயா என்ற 7 வயது மகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்றைக்கு மகா சிவராத்திரி என்பதால், குடும்பத்துடன் குல தெய்வம் கோயிலுக்கு செல்ல சென்றாயன் முடிவு செய்தார்.

மாயமான மீன் வியாபாரி.. டிரோன் வைத்து வலை வீசி தேடும் போலீஸ்.. புதுவையில் பரபரப்புமாயமான மீன் வியாபாரி.. டிரோன் வைத்து வலை வீசி தேடும் போலீஸ்.. புதுவையில் பரபரப்பு

டிரைவர் ராமு

டிரைவர் ராமு

இதற்காக நல்லதேவன்பட்டியில் உள்ள அய்யனார் கோயிலுக்கு ஒரு ஆட்டோவில் கிளம்பினார். அப்போது மாமியார் பொன்னுதாயியையும் தங்களுடன் வரசொன்னார் சென்றாயன். ஆட்டோவை ராமு என்ற 20 வயது டிரைவர் ஓட்டினார்.

சுக்குநூறானது

சுக்குநூறானது

ஆட்டோ தேனி- மதுரை சாலையில் கொண்டம நாயக்கன்பட்டியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ராமநாதபுரத்தில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியதில் ஆட்டோ அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

மாமியார் படுகாயம்

மாமியார் படுகாயம்

இதில், ஆட்டோவில் இருந்த சென்றாயன் மனைவி சுதா, மற்றும் 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். உயிருக்கு போராடிய சென்றாயனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கதறி அழுதனர்

கதறி அழுதனர்

ஆட்டோ டிரைவர் ராமு, சென்றாயன் மாமியார் பொன்னுதாயி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்துவிட்டதால், உறவினர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் துடிதுடித்து ஓடிவந்து கதறி அழுதது காண்போரை கலங்க வைத்துவிட்டது.

English summary
Govt Bus - Auto crash and 4 people died in Andipatti
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X