தனுஷ் குடும்பத்துக்கே தலைக்கனம்.. சொந்த ஊருக்குள் எதுக்குங்க பவுன்சர்? கொந்தளித்த கிராம மக்கள்!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள குலசாமி கோவிலில் நடிகர் தனுஷ், செல்வராகவன், கஸ்தூரிராஜா ஆகியோர் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்த நிலையில், அவரது சொந்த ஊர் மக்களையே நடிகர் தனுஷ் சந்திக்காததால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அடிக்கடி சொந்த ஊருக்கு வரும் தனுஷ் எங்களை பார்ப்பது கூட கிடையாது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது கடந்த அக்டோபர் 1ஆம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், படக்குழுவோ வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வக் கோவிலில் நடிகர் தனுஷ் மற்றும் குடும்பத்தினர் வழிபட்டுச் சென்றனர்.

Dhanush Ignores Hometown Fans in Theni

நடிகர் தனுஷ்

இந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா, அவருடைய மனைவி விஜயலட்சுமி, நடிகர் தனுஷ், அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் செல்வராகவன் குடும்பத்தினர் அனைவரும் முத்தரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

நடிகர் தனுஷ் குடும்பம்

சாமி தரிசனம் செய்ய செல்லும்போது அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தனுஷை ஆர்வத்துடன் பார்த்து வரவேற்றனர். ஆனால் நடிகர் தனுஷை கிராம மக்கள் பார்க்கவோ பேசவோ முயன்ற போது நடிகர் தனுஷின் பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஏமாற்றம் அடைந்தனர். தனுஷை பார்க்க வேண்டும் அவருடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என காலையிலிருந்து ஆவலுடன் காத்திருந்த அந்த ஊரை சேர்ந்த பொதுமக்களும் அவர் ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தனுஷ் ஊர் மக்கள் ஏமாற்றம்

நடிகர் தனுஷ் வருகைக்காக காலை 10 மணி முதல் கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 3 மணியளவில் கோவிலுக்கு வந்த தனுஷ், குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டு பின்னர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கடந்த சில நாட்களாக தனுஷ் தேனியில் தங்கி இருந்து மதுரையில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும் திருச்சியில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவிலுக்கு அருகே கேரவன்கள் வந்ததால் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வருவார்கள் என காலையில் இருந்தே மக்கள் காத்திருந்தனர்.

சொந்த ஊர் மக்கள் அதிருப்தி

ஆனால் வழக்கம் போல மக்களை சந்திக்காமலேயே தனுஷ் குடும்பத்தினர் திரும்பி சென்றனர். சென்னைக்கு சென்றால் தான் பார்க்க முடியாது சொந்த ஊருக்கு வரும்போது தனுஷை பார்க்கலாம் என அப்பகுதி மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் அவர்களை சந்திக்காமலேயே தனுஷ் சென்றார். அடிக்கடி வரும் தனுஷ் எங்களை பார்ப்பது கூட கிடையாது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. மேலும் சினிமா துறைக்குச் சென்ற பிறகு தனுஷ் குடும்பத்தினர் கிராம மக்களை மதிப்பதே இல்லை எனவும், ஒருவித தலைக்கனத்துடனே, பவுன்சர்கள் புடைசூழ வலம் வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+