Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னமனூரில் கிங் காங் சர்ப்ரைஸ்! தேனியில் நெகிழ்ச்சி தருணம்… டூப்ளிகேட் அஜித்தை பார்த்து திகைப்பு

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூருக்கு கிங்காங் வருகை தந்திருந்தது, அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது... விழா ஒன்றிற்கு வந்திருந்த கிங்காங், அங்கு அஜித் போலவே வந்திருந்த நபரை பார்த்து ஒரு கணம் அசந்து நின்றுவிட்டார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டம் சின்னமனூர் முத்தையா நகர் பகுதியில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் குடியிருப்பவரும் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகருமான காளிதாஸ் என்பவர் வீரம் என்ற பெயரில் உணவகம் திறந்துள்ளார்..

Theni King Kong Chinnamanur

இந்த உணவகம் மற்றும் பேக்கரியை, பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் கிங்காங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.. கிங்காங் ஓட்டல் திறக்க வருகிறார் என்று தெரிந்ததுமே ஏராளமானோர் முன்கூட்டியே அந்த பகுதியில் திரண்டு காத்திருந்தனர்...

தேனி சின்னமனூரில் கிங்காங்

காரில் வந்திறங்கிய கிங்காங்கை பார்த்ததுமே ஆரவாரம் செய்து கைகளை தட்டினார்கள்... ரிப்பன் வெட்டி ஓட்டலை திறந்து வைத்த கிங்காங், காளிதாஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.,. பிறகு திறப்பு விழாவில் ஏராளமான ரசிகர்கள் ஒன்று கூடி கிங்காங்குடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த விழாவின் சிறப்பம்சமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இன்று முதல் தொடர்ந்து நாள்தோறும் ஐந்து ரூபாய்க்கு டீ வடையுடன் கூடிய டிபன் வழங்கும் திட்டத்தினையும் அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக உணவுகளை கிங்காங் வழங்கினார். திறப்பு விழாவையொட்டி சுமார் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன

அச்சு அசல் அஜித்

விழாவில் அஜித் வேடம் அணிந்த ஒருவர் வருகை தந்து சிறப்பித்தார். அவருடனும் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அதேபோல விழாவில் கலந்து கொண்ட கிங்காங் செய்தியாளர்களிடம் பேசும்போது "வீரம் என்ற பெயரில் ரெஸ்டாரண்ட், பேக்கரியை திறந்து வைத்துள்ளேன்.. நடிகர் அஜித் மீது காளிதாஸ் கொண்டுள்ள பற்று ஆச்சரியத்தை தருகிறது.. பொருத்தமான பெயரைத்தான் ஓட்டலுக்கு சூட்டி உள்ளார்..

நடிகர் கிங்காங்... காளிதாஸ் அஜித்தின் தீவிர ரசிகர்... 500 பேருக்கு அன்னதானம் தருகிறார்.. தானத்தில் பல தானங்கள் இருந்தாலும் அதில் சிறந்தது இந்த அன்னதானம் தான்.. இது மட்டுமே போதும் என்ற மனநிறைவை தரக்கூடியது.. வயிறு நிரம்பக்கூடியது..

மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம்

மாற்றுத்திறனாளிகளுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் குறைந்த செலவில் உணவளிப்பது வரவேற்கத்தக்கது.. இன்னும் இதுபோல 20 கிளைகளை காளிதாஸ் திறக்க வேண்டும் .. இன்று புதிய உணவகம், பேக்கரி, ஸ்வீட்டுகள், பிரியாணி மற்றும் நாட்டுக்கோழி உணவுகள் என அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது..

காளிதாஸ் இதுபோல இன்னும் 20 கிளைகளைத் திறக்க வேண்டும் , கடந்த 10 ஆண்டுகளாக அவர் இந்தத் தொழிலைச் சிறப்பாகச் செய்து வருகிறார்..

இந்த விழாவிற்கு வந்திருந்த ஒரு நபர் அச்சுஅசல் அஜித்தை போலவே இருந்தார்.. அவரை பார்த்து ஊர் மக்களே திகைத்து போய்விட்டார்கள், நடிகர் அஜித்தே நேரில் வந்து ஆசீர்வாதம் செய்தது போல் இருக்கிறது என்று கிண்டலாக சொன்னார் கிங்காங்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உணவகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட திரைப்பட காமெடி நடிகர் கிங்காங் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக உணவுகளை வழங்கிய இந்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+