என்னங்க இது? போடியில் நடந்த இரவு மீட்டிங்.. மியூசிக் சேர் "கேம்" ஆடி.. திமுகவை திணறடித்த முனியம்மாள்!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனியை சேர்ந்த அதிமுக நிர்வாகி முனியம்மாள் அங்கு திமுக நிர்வாகிகளை 3 நாட்களில் திணற வைத்துள்ளார். முனியம்மாள் எடுத்த அடுத்தடுத்த முடிவுகளால் அங்கு திமுக நிர்வாகிகள் பலர் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

போடியை சேர்ந்த அதிமுக மாவட்ட மகளிரணி நிர்வாகி முனியம்மாள். அங்கு இவர் அதிமுக போடி நகர் இணை செயலாளராக இருந்தார். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவில் போட்டியிட இவர் விருப்பமனு அளித்து இருந்தார்.

போடி உள்ளாட்சி தேர்தலில் ஏற்கனவே இவர் 24வது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் நகராட்சி தேர்தலில் 22வது வார்டில் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்து இருந்தார்.

 விருப்பமனு

விருப்பமனு

ஆனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த முனியம்மாள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். கடந்த வியாழக்கிழமைதான் இவர் திமுகவில் இணைந்தார். திமுகவில் நகராட்சி உறுப்பினராக போட்டியிட போடி 22வது வார்டுக்கு விருப்பமனு கொடுத்து இருந்தார். இதை திமுகவில் ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் அவருக்கு போட்டியிட அனுமதி அளித்தது. அதோடு இவர் திமுக சார்பாக வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.

வேட்புமனு

வேட்புமனு

இவருக்கு திமுக சார்பாக அங்கீகார கடிதம் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக முனியம்மாள் திமுக வேட்பாளராக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. ஆனால் திடீரென இவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை வேட்பாளராக அறிவிக்கப்பட்டும் முனியம்மாள் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. மாறாக வீட்டிலேயே முடங்கி இருந்தார். இது திமுக நிர்வாகிகள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி மாற்றம்

கட்சி மாற்றம்

இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக நேற்று இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் போடி வந்திருந்தார். அங்கு அவர் அதிமுக நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டு இருந்த நிலையில் திடீரென அங்கு வந்த முனியம்மாள் ஓபிஎஸ் முன்னிலையில் நேற்று இரவே அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் நேற்று இரவு நடந்த நிர்வாகிகள் மீட்டிங்கிற்கு பின்பாக முனியம்மாள் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

திமுக நிர்வாகிகள் கோபம்

திமுக நிர்வாகிகள் கோபம்

முனியம்மாள் இப்படி அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் இணைந்துவிட்டு, சீட்டும் வாங்கிவிட்டு, இரண்டே நாட்களில் இப்படி இரவோடு இரவாக மீண்டும் அதிமுகவில் இணைந்தது தேனி அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னங்க இப்படி பண்ணிட்டாங்க என்று .. திமுக நிர்வாகிகள் முனியம்மாள் எடுத்த இந்த முடிவால் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் போடி நகராட்சி 22 ஆவது வார்டில் கல்பனா தி.மு.க. சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் திமுக சார்பாக இங்கே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+