Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிதுனுக்கு 26 வயசுதான்.. செய்த செயலால் ஆடிப் போன சொந்தங்கள்.. நடுங்கிப் போன தேனி!

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிக் கொண்டார் தேனி இளைஞர்

Subscribe to Oneindia Tamil

தேனி: ஒரே ஒரு போஸ்டரை அடித்து ஒட்டி தேனியையே மிரள வைத்துவிட்டார் இளைஞர்.. இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ளது அனுமந்தன்பட்டி.. இங்கு வசித்து வருபவர் மிதுன்.. இவருக்கு 26 வயதாகிறது.

ப்பவுமே சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருப்பாராம். அதிலும் தினமும், தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை விதவிதமாக வைப்பது இவருடைய ஹாபியாக இருந்துள்ளது.

 போஸ்டர்

போஸ்டர்

இந்நிலையில், நேற்று மாலை மிதுனின் மரண செய்தி சோஷியல் மீடியாவில் வெளியானது.. அத்துடன் சனிக்கிழமை அதாவது இன்றைய தினம், அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.. இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் அதிர்ந்து போனார்கள். அதுமட்டுமல்ல, தன்னுடைய செல்போன் ஸ்டேட்டஸில் இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரைதான் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார்.

 நண்பர்கள்

நண்பர்கள்

இதனால் பதறிப்போன உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுது கொண்டே மிதுன் வீட்டுக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. ஆனால் மிதுன் வீட்டிற்குள் ஹாயாக உட்கார்ந்திருந்தார்.. வரிசையாக வந்தவர்களை பார்த்து மிதுன்தான் மிரண்டு போனார்.. சும்மா ஒரு பரபரப்புக்காகத்தான், தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டதாகவும் அசால்ட் காரணத்தை சொன்னார். இதனால் மொத்த பேரும் ஆத்திரமானார்கள்.

 கண்டிப்பு

கண்டிப்பு

"அதுமட்டுமல்ல, என் மீது யாருக்கெல்லாம் உண்மையான பாசம் இருக்குன்னு பார்க்க இதுதான் பெஸ்ட் வழின்னு தோணுச்சு" என்று மிதுன் சொல்லவும், திரண்டு வந்தவர்கள் அத்தனை பேரும் தாறுமாறாக மதனை திட்டி தீர்த்தனர்.. இனி இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று மிதுனை கண்டித்து விட்டும், அறிவுறுத்தி விட்டும் சென்றனர்.

அட்டகாசம்

அட்டகாசம்

இப்படித்தான் ஒரு படத்தில் வினுசக்கரவர்த்தி, தான் இறந்துவிட்டதைபோல போஸ்டர் அடித்துவிடுவார்.. யாரெல்லாம் தன் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கவே இப்படி செய்ததாகவும் ஒரு காரணம் சொல்லுவார்.. பதறியடித்து வந்தவர்கள் எல்லாம் வினுசக்கரவர்த்தியை டோஸ் விட்டுட்டு போவார்கள்.. அதே டெக்னிக்கைதான் மிதுனும் பயன்படுத்தி இருக்கிறார்.. "டைம் பாஸ்" என்ற பெயரில் நாளுக்கு நாள், அட்டகாசங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+