தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி தேனிக்கு தக தையா தையா! பல ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் போக்குவரத்து! இனி ஹாப்பி அண்ணாச்சி!

Google Oneindia Tamil News

தேனி : மதுரை தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தேனி ரயில் சேவை மே 26ஆம் தேதியிலிருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்குவதால் மதுரை தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை-போடி இடையே 90.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 2011-இல் தொடங்கின.

3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!

தொடக்கத்தில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் பணிகள் ஆமை வேகத்தில் நடத்தன. இதனால் பணியை வேகமாக முடிக்கக்கோரி பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி ரயில்

தேனி ரயில்

இதையடுத்து மத்திய அரசு இப்பணிக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனைத்தொடர்ந்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையும், 2 ஆவது கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 17 கிலோ மீட்டர் தூரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

சோதனை ஓட்டம் நிறைவு

சோதனை ஓட்டம் நிறைவு

இதற்கிடையே வைகை ஆற்றுப்பாலம், 30 சிறு பாலங்கள், ரயில்வே நிலையப் பணிகள் முடிக்கப்பட்டன. கடந்த மே மாதத்தில் முடிய வேண்டிய பணி, கொரோனா காரணமாக தாமதமாகியது. அண்மையில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அன்று காலை 11.30 மணிக்கு ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் தெற்கு ரயில்வே கட்டுமான இணைப் பொறியாளர் சூரியமூர்த்தி தலைமையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

மீண்டும் தொடக்கம்

மீண்டும் தொடக்கம்

இதில் ஆண்டிபட்டி-தேனி இடையே உள்ள 17 கிலோ மீட்டர் தூரத்தை 10 நிமிடங்களில் ரயில் என்ஜின் வந்தடைந்தது. இந்நிலையில் ம்துரை - தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பின் 27-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு ரயில் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேனியில் இருந்து மதுரைக்கு தினமும் மாலை 6.15 க்கு ரயில் புறப்படும் என்றும் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய மூன்று இடங்களில் ரயில் நின்று செல்லும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மக்கள் மகிழ்ச்சி

மக்கள் மகிழ்ச்சி

சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி மே 26ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மதுரை- தேனி ரயில் சேவை தொடங்கி வைக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகமும் மேற்கொண்டுள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை - தேனி இடையே மே 26 முதல் ரயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை மாவட்ட மக்கள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The people of Madurai Theni district are happy with the resumption of the long awaited Theni train service after 12 years from May 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X