தேனியில் வைகை ஆற்றுப்பாலத்தில் பைக்கை நிறுத்திய கள்ளக்காதல் ஜோடி.. இதுல ஹேப்பி டூர்.. இரவில் கொடுமை
தேனி: தேனி கள்ளக்காதல் ஜோடி, சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்துள்ளது.. கடந்த 2 நாட்களாகவே சுற்றித்திரிந்துவிட்டு, மீண்டும் தேனிக்கே திரும்பி வந்துள்ளது.. இந்த கள்ளக்காதலர்களின் விவகாரம் இருவரின் குடும்பத்துக்கும் தெரியவந்ததையடுத்து, இருவருமே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். இந்த ஜோடிக்கு பிறகு என்ன நடந்தது?
தேனி நகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ளது குன்னூர் கிராமம்... இங்குள்ள வைகை ஆறு ரயில்வே பாலத்துக்கு அடியில் ஒரு ஆணும், பெண்ணும் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக தேனி ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஆண், பெண் உடல்கள் ரயிலில் மோதி பல பாகங்களாக சிதறி கிடந்தன... இதில், இந்த ஆணுக்கு சுமார் 35 வயதிருக்கலாம் என தெரிகிறது.
போடி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்
போடி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 8.50 மணியளவில் தேனி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு கிளம்பியிருக்கிறது.. இந்த ரயில், குன்னூர் வைகையாற்று பாலம் அருகே இரவு 9 மணியளவில் கடப்பது வழக்கமாகும்.. அந்தவகையில், நேற்றுமுன்தினமும் இந்த ரயில், பாலத்தை கடந்து சென்றபோது, ஜோடி மீதும் மோதி இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
இரவு நேரம் என்பதால் யாருக்கும் இந்த சம்பவம் பற்றி தெரியவில்லை. நேற்று காலையில் விவசாயிகள், தங்களது வழக்கமான விவசாய பணிகளுக்காக சென்றபோதுதான், ஆணும், பெண்ணும் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதற்கு பிறகே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக் நம்பர் -விசாரணை
சிதறிக் கிடந்த அவர்களது உடலை மீட்டு, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையை துவக்கினார்கள.. இவர்களது உடல்கள் கிடந்த பகுதியிலேயே ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது... அதிலிருக்கும் நம்பரை வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் உயிரிழந்த நபர், திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
திருமணமானவருக்கு வந்த கள்ளக்காதல்
மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், சம்யுக்தா என்ற பெண்ணுடன், மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கம் தகாத உறவிலும் போய் முடிந்துள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவராம் சம்யுக்தா.. ஒருகட்டத்தில் இவர்களது காதல் விவகாரம், இருவரின் வீடுகளிலும் தெரிந்து, ரணகளம் வெடித்துள்ளது..
சுற்றித் திரிந்த ஜோடி
இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலர்கள் மணிகண்டனும், சம்யுக்தாவும் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.. கடந்த 2 நாட்களாகவே பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றிருக்கிறார்கள்.. இறுதியாகத்தான், குன்னூர் வைகையாற்று பாலத்துக்கு வந்திருக்கிறார்கள்.. அங்கே பாலம் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு, ரயில் தண்டவாளத்தில் இருவருமே தலை வைத்து படுத்து, தற்கொலை செய்துள்ளது, தற்போது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது,
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications