ஓபிஎஸ் மகன் கம்பத்தில் போட்டியில்லை.. ஒதுங்கியது ஏன்.. பரபரப்பு தகவல்
தேனி: சட்டசபை தேர்தலில் கம்பம் தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப்புக்கு சீட் வழங்கப்படவில்லை. கம்பம் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவான ஜக்கையனுக்கும் சீட் வழங்கப்படவில்லை. அதேநேரம் தேனி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சையதுகானுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்புக்கு ஆதரவாக விருப்ப மனு தாக்கல் செய்திருந்தால் சீட் அவருக்குத்தான் வழங்கப்படும் என்ற பரபரப்பு நிலவியது.
அதற்கு ஏற்றார் போல் எந்த மறுப்பும் ஓபிஎஸ் தரப்பில் இருந்தோ அல்லது ஓபிஎஸ் மகன் தரப்பில் இருந்தோ வரவில்லை. இதனால் எப்படியும் கம்பத்தி ஜெயபிரதீப்புக்கு சீட் கொடுத்துவிடுவார்கள் என்றே தேனி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.

அதிமுக வேட்பாளர்கள்
ஆனால் இன்று அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதியிலுமே அதிமுகவே போட்டியிடுகிறது. ஆண்டிபட்டியில் லோகிராஜன், பெரியகுளத்தில் முருகன், போடியில் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கம்பத்தில் சையது கான் போட்டியிடுகிறார்.

போட்டியில்லை
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஜெயபிரதீப்புக்கு கம்பத்தில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவர் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். கம்பத்தில் போட்டியிட்டால், போடி தொகுதியில் அப்பாவிற்காக களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும் என்பதால் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

தவித்தார்
கடந்த இரண்டு முறையுமே ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களம் இறங்கி வேலை செய்து வந்தது ஜெயபிரதீப் தான். எனவே கம்பத்தில் போட்டியிட்டால் அங்கு போய் தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டிய நிலை வரும். அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் ஓபிஎஸ், மற்றும் ஜெயபிரதீப் அதாவது அப்பா, மகன் இரண்டு பேரும் தேர்தலில் போட்டியிட்டால் விமர்சனங்களும் எழும் என்பதால் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

திமுகவின் சவால்
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தேனியில் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகள் கடந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. மீண்டும் அங்கு திமுகவே போட்டியிட வாய்ப்பு அதிகம். ஏன் தேனி மாவட்டத்தின் நான்கு தொகுதியிலுமே திமுகவே போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. போடி தொகுதியில் வெற்றி பெறுவது இந்த முறை ஓபிஎஸ்க்கு மிகவும் சவாலாக இருக்கும் என்கிறார்கள் அங்குள்ள திமுகவினர்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications