எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவதுதான் நம் கடமை.. அமித்ஷா முன்பு அண்ணாமலை பரபர பேச்சு
நெல்லை: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவது எங்கள் கடமை என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய அண்ணாமலை, மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துகொண்டிருக்கிறது என்றும், அடுத்த 8 மாதங்கள் பூத் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
நெல்லையில் இன்று பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். பல்வேறு பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

எடப்பாடியை முதல்வர் ஆக்க உழைக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களின் கடமை. அடுத்த ஆறு மாதங்கள் பூத் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது:- நம்முடைய 12 ஆண்டுகால ஆட்சியின் சாதனை.. 4 ஆண்டு கால திமுக ஆட்சியின் வேதனை.. இவை இரண்டையும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.. இந்த பொறுப்பானது அரங்கத்தில் இருக்கக் கூடிய தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். கட்சி பூத்தில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் மட்டும் தான் இங்கு வந்திருக்கிறார்கள்.
பெரிய மாற்றம் வர உழைக்கனும்
நம்முடைய பொறுப்பை உணர்ந்து எல்லாரும் இங்க வந்துருக்கீங்க.. வரும் தேர்தலில் வெற்றி பெறும் வரை உழைக்க வேண்டும். முதல் மாநாடாக இந்த பூத் கமிட்டி மாநாடு இன்று நெல்லையில் நடைபெறுகிறது. இன்னும் 6 மாநாடுகள் நடக்கிறது. கடைசி மாநாட்டில் பிரதமர் மோடி, அமித்ஷா வருவார்கள். எல்லாரும் கடுமையாக உழைங்க.. ஒரு ஒரு வாக்கையும் சேகரித்து கொண்டுவாங்க.. பெரிய மாற்றத்திற்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக பாஜக இடையே கூட்டணி அமைந்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக யார் முதல்வர் வேட்பாளர்? யார் தலைமையில் கூட்டணி என பல கேள்விகள் எழுந்தன. எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என கூறி வந்தார். பாஜக தலைவர்களோ தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தான் கூட்டணி என்று பேசி வந்தனர். இதனால் யார் தலைமையில் கூட்டணி என்ற குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது.
அமித்ஷா தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி தான் என்று பேசியதாகவும், இந்த விவகாரத்தில் அமித்ஷா சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன்.. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அண்ணாமலை பேசியது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், அமித்ஷா முன்பே அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என பேசியிருப்பது இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
-
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications