₹1க்கு பெட்ரோலா? போட்றா தம்பி பிரேக்க! நெல்லையில் கூடிய கூட்டம்! அப்பறம் நடந்தது தான் ட்விஸ்டே!
நெல்லை : நெல்லையில் கணவரின் நினைவு தினத்தை ஒட்டி ஒரு ரூபாய் குறைத்து பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்பதற்கு பதிலாக ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படும் என வைக்கப்பட்ட பேனரால் குதூகலம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் சென்று ஏமாந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பொருளாதாரப் போட்டி நிறைந்த இந்த சமூகத்தில் ஒருவர் விரைவிலேயே செலவில்லாமல் கவனம் பெற வேண்டும் என்றால் தற்போது இருக்கவே இருக்கிறது சமூக வலைதளங்கள்.
பிரியாணி கடை, துணிக்கடை, செல்போன் கடை திறப்பு விழாவுக்கு பெரிய அளவில் பிரபலங்களை அழைப்பதை விட ஒரு ரூபாய்க்கு பிரியாணி, 50 பைசாவுக்கு டீ ஷர்ட், பத்து பைசாவுக்கு செல்போன் என அறிவித்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு ரூபாய் பெட்ரோல் என்று அறிவிப்பு தான் நெல்லையில் பேசுபொருளாக இருந்தது

நெல்லை சுவாரசியம்
அந்த வகையில் ஒரு ரூபாய் பெட்ரோல் என்று அறிவிப்பு தான் நெல்லையில் பேசுபொருளாக இருக்கிறது. நெல்லையில் கணவரின் நினைவு தினத்தை ஒட்டி ஒரு ரூபாய் குறைத்து பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்பதற்கு பதிலாக ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்படும் என வைக்கப்பட்ட பேனரால் குதூகலம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் சென்று ஏமாந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பொன்னாக்கடியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தான் இது நடந்துள்ளது.

ஒரு ரூபாய்க்கு பெட்ரோல்
அந்த நிலையத்தின் உரிமையாளர் மெர்சி ராஜன், தனது கணவரின் நினைவு தினத்தையொட்டி, பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கு குறைந்த விலைக்கு வழங்குகிறோம் என்று பேனர் வைத்திருந்தார். அந்த விளம்பரத்தைப் பார்த்த வாகன ஓட்டிகள் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நினைத்து அங்கு சென்று ஒரு ரூபாய் கொடுத்து பெட்ரோல் போடச் சொல்லியுள்ளனர்.

தவறான பிளக்ஸ்
ஆனால் 103 ரூபாய் தான் பெட்ரோல் ஒரு ரூபாய் குறைத்து 102 ரூபாய்க்கு பெட்ரோல் போடலாம் என பங்க் ஊழியர்கள் சொன்னதால் வெளியே பிளக்ஸ் பேனர் இருக்கிறதே என கேட்டுள்ளனர். பிறகு தான் தெரிந்தது அவர்கள் தமிழில் தான் தவறு என்று. அதாவது ஒரு ரூபாய் குறைத்து பெட்ரோல் போடப்படும் என்பதற்கு பதிலாக ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் போடப்படும் என தவறாக அச்சிட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

தமிழ் அறிவு
இதையடுத்து வேறு வழியின்றி கேட்ட பணத்தை கொடுத்து விட்டு பலரும் அங்கிருந்து சென்றனர். தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பிளக்ஸ் பேனர் அடித்த கடைக்காரரின் தமிழ் அறிவை கண்டு வியந்து வருகின்றனர். தற்போது ஒரு ரூபாய்க்கு பிரியாணி ஒரு ரூபாய்க்கு டீ சர்ட் என கடைக்காரர்கள் ஆஃபரை அறிவித்து வரும் நிலையில் இது போல் தான் பெட்ரோலும் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் தாங்கள் ஏமாந்து விட்டதாக வாகன ஓட்டிகள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications