"வாக்குச்சாவடி வழிகாட்டி" திட்டத்திற்காக.. திருநெல்வேலி ஆட்சியருக்கு விருது.. தேர்தல் ஆணையம் கவுரவம்
திருநெல்வேலி: கடந்த சட்டசபைத் தேர்தலில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறப்பாக பணியாற்றியதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் விருது வழங்கவுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கடந்த சட்டசபைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலராக செயலாற்றினார். அப்போது, அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்குச்சாவடி கண்காணிக்கப்பட்டது. இது மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 1,924 வாக்குச் சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச் சாவடிகள் அனைத்தும் ஜிஐஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் முறையாக கண்காணிக்கப்பட்டது.

தேர்தல்
தேர்தல் சமயத்தில் பணிகளை எளிதாக்கும் விதமாக வாக்காளர்கள் முதல் தேர்தலில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் வரை எளிதாக அனைவருக்கும் உதவும் வகையில் 'வாக்குச்சாவடி வழிகாட்டி' என்ற இணையதள அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தை திருநெல்வேலி மாவட்ட தேசிய தகவலியல் மையம் உருவாக்கியது.

இணையதளம்
இந்த இணையதளம் வாயிலாக அனைத்து வாக்காளர்களும் தங்கள் இருப்பிடத்திலிருந்து தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டிய வழிகளை தெளிவாக பார்த்து அறிய முடிந்தது. மேலும், 360 கோண பரிணாமத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளின் உட்புறத் தோற்றத் தையும் இணையதளம் வழியாக எளிதாக பார்க்க முடிந்தது.

கண்காணிப்பு
இந்த புதிய அமைப்பானது வாக்காளர்களுக்கு மட்டுமின்றி தேர்தல் பார்வையாளர்களுக்கும், நுண் பார்வையாளர்களுக்கும், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. அதேபோல், சமூக ஊடகங்களில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்தையும் கண்காணிக்கவும் புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.

ஆட்சியர்
கணினி தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேர்தல் சமயத்தில் வாக்குச் சாவடிகளை கண்காணித்ததற்கும், புதிய வசதிகளை கண்டறிந்து தேர்தல் சமயத்தில் முன்மாதிரியாக செயல்பட்டதற்காக, திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணுவுக்கு விருது வழங்கவிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். தேசிய வாக்காளர் தினத்தில் டெல்லியில் நடைபெறும் விழாவில் ஆட்சியர்விஷ்ணுவுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications