நெல்லை பள்ளிக் கட்டிட விபத்து.. தீவிரமடையும் விசாரணை.. தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
நெல்லை : நெல்லையில் தனியார் பள்ளி கழிவறையின் சுற்றுச் சுவர் இடிந்து மாணவர்கள் பலியான நிலையில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமை ஆசிரியர் பெர்சீஸ் ஞானசெல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் டேவிட் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிசம்பர் 17ம் தேதி நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளியின் கழிவறை சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுவர் இடிந்து மாணவர்கள் பலி
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் எஸ்.என். நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சாப்டர் எனும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி. சுமார் 143 ஆண்டுகள் பழமையான சாப்டர் மேல்நிலைப் பள்ளியை திருநெல்வேலி சிஎஸ்ஐ டயோஸிசின் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த பள்ளி என்பதால் நெல்லை சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்கள் அதிகம் பேர் இங்கு வந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி பள்ளியின் கழிவறை கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் இந்த இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எந்தெந்த கட்டிடங்களை சேதம் அடைந்துள்ளதோ அவற்றை இடித்து விட்டு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் கைது
உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ள நிலையில், தென்னிந்தியத் திருச்சபை நிர்வாகமும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்த மாணவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளது. இதற்கிடையே நெல்லை பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெல்லை போலீசார் வழக்குப் பதிந்த நிலையில் பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி 3 பேரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டாட்சியரிடம் விளக்கம்
பள்ளி விபத்து குறித்து கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி முதற்கட்ட விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும் சாப்டர் பள்ளியை நிர்வகித்து வரும் டயோசிசன் கல்வி நிறுவனங்களில் மேல்நிலைப்பள்ளி நிர்வாக மேலாளர் புஷ்பராஜ், கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜாராகி விளக்கம் தந்துள்ளார். ஆனாலும் புஷ்பராஜ் சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை எனக்கூறிய கோட்டாட்சியர் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

4 பேர் பணியிடை நீக்கம்
இதற்கிடையே நெல்லை பள்ளி விபத்து உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்குமாறு டயோசிசன் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த குழு விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சாப்டர் பள்ளி தலைமையாசிரியர் பெர்சீஸ் ஞானசெல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ் அருள், டைட்டஸ் சுதாகர், டேவிட் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான கடிதமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் தாளாளர் செல்வகுமார் அந்தப் பதவியில் இருந்து நீக்கி தென் இந்திய திருச்சபை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications