திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்!

Google Oneindia Tamil News

Recommended Video

    செங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்!- வீடியோ

    நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை - கொல்லம் இடையே 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

    திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை - கேரள மாநிலம் கொல்லம் இடையே இருந்த மீட்டர்பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணிகள் 2010ஆம் ஆண்டு தொடங்கின. இதனால் அந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    Senkottai - Kollam train resumes its service after 8 years gap

    அதிர்ச்சி சம்பவம்.. சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம் அதிர்ச்சி சம்பவம்.. சாமியார் பேச்சை கேட்டுக் கொண்டு 16 வயது சிறுவனை ஜீவசமாதி செய்த குடும்பம்

    பின்னர் பணிகள் முடிந்து கடந்த 2018 ஆம் ஆண்டு தாம்பரம் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூலை 10ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்குப் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

    அதன்பின்னர் இந்தாண்டு எர்ணாகுளம்-வேளாங்கண்ணி,வாராந்திர சிறப்பு ரயிலும்,தினமும் நெல்லை-பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும், தாம்பரம் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட ரயில் இந்தஆண்டுமுதல் தினசரி ரயிலாக அறிவிக்கப்பட்டு இயக்கபட்டு வருகின்றது.

    இந்த நிலையில் தமிழகத்தின் கடைசி பகுதியாகவும்,கேரளமாநிலத்தின் நுழைவு பகுதியாகவும் இருக்கும் பகவதிபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலைத் தவிர எந்த ரயில்களும் நின்று செல்வதில்லை. இந்த ரயில் நிலையத்தையொட்டி புளியரை, தெற்குமேடு, புதூர், கேசவபுரம், கட்டளைக்குடியிருப்பு, தவணை, பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு என 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இங்கு சுமார் 25 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சார்ந்தவர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அரபு நாடுகளிலும் வசிப்பாதால் இங்கு ரயில்களை நிறுத்தி செல்ல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதிகளும் ஏற்பப்டுத்திடவேண்டும். கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்திட வேண்டும்.

    பிளாட்பாரம் பணிகள் தொய்வு அடைந்தும், மழைக்காலங்களில் ரயில் மலைப்பாதையில் செல்லும் போது ஆபத்து நேரிட்டால் ரயில் பின்னோக்கி வந்து பாதுகாப்பாக மேட்டுப்பகுதியில் நிறுத்தும் தனிப்பாதை பனைகளும் இன்னும் முடிவடையாமல் உள்ளதாகவும் அவற்றையும் விரைந்து முடிக்க வேண்டும் என்கின்றனர் இந்த பகுதிமக்கள்.

    English summary
    Senkottai to Kollam train has resumed its service after an eight year gap.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X