கணவர் கண் எதிரே பெண் பலாத்காரம்.. நெல்லையில் கொடூரம்.. 2 சிறார்கள் உட்பட மூன்று பேர் கைது!
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள சிவந்திப்பட்டி என்ற பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கிய போலீசார், இரு சிறார்கள் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தே வருகிறது. இருப்பினும், அதையும் தாண்டி சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. அப்படியொரு மோசமான சம்பவம் தான் நெல்லையில் நடந்துள்ளது.

கூட்டு பலாத்காரம்
திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி என்ற பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கணவரைத் தாக்கிவிட்டு, அவரின் கண் முன்னே அசாம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில், அசாம் பெண்ணை வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஏகப்பட்ட கல் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல் குவாரிகளில் அதிகளவில் வெளிமாநில இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் பலர் தங்கள் குடும்பத்துடனேயே வந்துவிடுகிறார்கள். குடும்பமாக இங்கேயே வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகிறார்கள்.
அப்படி தான் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கல்குவாரியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதி வேலைக்காக இங்கு வந்துள்ளது. இவர்களுக்கு அங்குள்ள ஏஜெண்ட் ஒருவர் இந்த கல் குவாரியில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை அப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்து அதற்கான கமிஷனை பெறுபவர் தான் இந்த ஏஜெண்டின் வேலை!
ஸ்ரீவைகுண்டம் கல் குவாரி
இவர் தான் அசாம் தம்பதிக்கும் அங்குள்ள கல் குவாரியில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும், போதிய சம்பளம் இல்லை.. அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை என்பதால் கல் குவாரியில் வேலை செய்ய விருப்பமில்லை என அந்த அசாம் ஜோடி சொல்லி இருக்கிறது. மேலும், கேரளாவில் வேறு வேலைக்கு செல்வதாக கூறியுள்ளனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த அந்த ஏஜெண்ட் கல் குவாரியில் வேலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், அதை கேட்காமல் அந்த ஜோடி அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் அரசன்குளத்தில் இருந்து நெல்லைக்கு ஆட்டோ மூலம் சென்றுள்ளனர். நெல்லையில் இருந்து ரயில் மூலம் கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு போன் செய்த கல்குவாரிலேயே வேலை செய்யும்படி அந்த ஏஜெண்ட் மிரட்டியுள்ளாார்.
கைது
மேலும், இரு சிறார்கள் தனது பைக்கில் அழைத்து சென்று சிவந்திப்பட்டியில் அருகே காத்திருந்துள்ளார். அசாம் ஜோடி வந்த ஆட்டோவை பார்த்தவுடன் அதை மறித்து நிறுத்தியுள்ளார். கல்குவாரி அசாம் ஜோடி பணத்தை திருடிவிட்டதாக சொல்லி ஆட்டோவில் இருந்து இறக்கியுள்ளான். பிறகு அவர்களை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற அவர்கள், கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின், கணவர் கண் எதிரே பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த கொடூரம் அப்பகுயில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்த போலீசார் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்துள்ளனர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications