யார்னு பாருங்க.. நெற்றியில் பளிச் நாமம்.. அட நாராயணனா?.. எல்லார் முன்னாடியும் எகிறி எகிறி.. செம்ம
நெல்லை: தேவர் ஜெயந்தி விழா டான்ஸ் ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. டான்ஸ் ஆடுபவர் தான் இதில் ஹைலைட்டே..!!
ரெட்டியார்பட்டி நாராயணன் யார் தெரியுமா? இவர் கடந்த 1986-ம் முதல் அதிமுகவில் உறுப்பினராக இருப்பவர்.. ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்...
ஜெயலலிதா முதல்வரான 1991-ல் இருந்து 1996 வரை கிளைச்செயலாளர், 1996-ல் ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர், 2004-ல் பாராளுமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை தேர்தல் பணிக்குழு உறுப்பினராக பணியாற்றியவர்.
மாற்றம்! தேவர் ஜெயந்திக்கு போஸ்டர் அடித்த தேவேந்திர குல வேளாளர்கள்! அசத்தும் தென்மாவட்ட அரசியல் களம்

நாராயணன்
பிறகு, 2009 பாராளுமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பணிக்குழு உறுப்பினர், அதன்பிறகு 2009-ல் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் மற்றும் 2011-ல் புறநகர் தெற்கு மா.து.செ. அதனைத் தொடர்ந்து 2013-ல் இருந்து எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பணியாற்றியவர்.. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரெட்டியார்பட்டி நாராயணன், அதிமுகவில் இணைந்தபிறகு, உழைப்பால் உயர்ந்தார்.

குஷி டான்ஸ்
இப்போது என்ன விஷயம் தெரியுமா? இவரது ஒரு டான்ஸ் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடுக்கச்சிமதில் பகுதியில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது... இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டார்... அந்த பகுதி இளைஞர்கள், அந்த விழாவில் டான்ஸ் ஆடி கொண்டிருந்தனர்.. இதை பார்த்ததுமே நாராயணன் உற்சாகமாகிவிட்டார்.. பிறகு, அவரும் இளைஞர்களுடன் இணைந்து டான்ஸ் ஆடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேளம் + விசில்
மேளம் அடிக்க, அடிக்க அதற்கு தகுந்தாற்போல் கைகளை தூக்கி, எகிறி குதித்து நடனமாடினார்.. இதை பார்த்ததும் அங்கு நடனமாடி கொண்டிருந்த இளைஞர்கள் விசில் அடித்தார்கள்.. விசில் சத்தம், கைத்தட்டலும் கேட்டதுமே இன்னும் துள்ளி துள்ளி குதித்தார் நாராயணன்.. சிறிது நேரம் ஆடியவர், பிறகு டக்கென நிறுத்திவிட்டு, கைகளை தட்டி, அங்கு நடனமாடி கொண்டிருந்தோருக்கு உற்சாகம் தந்தார்.. கை கொடுத்து வாழ்த்து சொன்னார். இந்த வீடியோதான் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.

திடீர் என்ட்ரி
டான்ஸ் மட்டுமில்லை, இவர் சிலம்பம் நல்லா சுத்துவார்.. இப்படித்தான் ஒருமுறை இவர் எம்எல்ஏவாக இருந்தபோது,செண்பகராமநல்லூரில் உள்ள அரசு நடுநிலை பள்ளியானது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.. அதில் சிறப்பு விருந்தினராக இவர் கலந்து கொண்டார்.. எம்எல்ஏ வந்திருப்பதால், அந்த பள்ளி மாணவர்கள் சிலம்பம் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.. திடீரென நாராயணனும் என்ட்ரி தந்துவிட்டார்.. மாணவர்களுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றி அசத்திவிட்டார்.. பதவியில் எதுவும் இல்லையென்றாலும், அந்த தொகுதி மக்களிடம் ஆடல், பாடல், எளிதில் நெருங்கியே இருக்கிறாராம் நாராயணன்..!!