‛‛முக்கியம்’’.. சென்னையை போல் பேய்மழை.. நெல்லை தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றைய தினம் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்தமிழகத்தில் அநேக இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.
20 செமீ வரை பதிவு! நெல்லையை மிரட்டும் கனமழை.. எந்த இடங்களில் எவ்வளவு தெரியுமா? முழு பட்டியல் இதோ
திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தமட்டில் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனி, பழைய பேட்டை உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
மழை மறைவு ஊர்களில் கூட சூழ்ந்த வெள்ளம்! அபாயத்தில் வீடுகள்! நெல்லை, தூத்துக்குடியில் தேவை நடவடிக்கை
மேலும் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மழையில் நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீரில் அளவு என்பது மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. 30 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணியில் திறந்து விட வாய்ப்புள்ளது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (18.12.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
— District Collector, Tirunelveli (@Collectortnv) December 17, 2023
தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை மட்டும் கொண்டு இயங்குமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது
மேலும் அடுத்த வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நாளையும் திருநெல்வேயில் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி நாளை (திங்கட்கிழமை) திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதோடு தனியார் நிறுவனங்களுக்கும் அவர் முக்கிய அட்வைஸை வழங்கி உள்ளார். அதாவது தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை மட்டும் கொண்டு இயங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கனமழையின் காரணமாக இந்த அறிவுரையை வழங்கி உள்ளார்.
முன்னதாக வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது. இது சென்னை வழியாக கடந்த 5ம் தேதி ஆந்திராவில் கரையை கடந்தது. முன்னதாக மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4 ம் தேதிகளில் தனியார் நிறுவனங்கள் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. இந்த அறிவுரைக்கு நடுவே 3 மற்றும் 4 ம் தேதிகளில் சென்னையில் இடைவிடாது கனமழை கொட்டி வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications