Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடங்கி கிடக்கும் நுகர்வோர் ஆணையம்.. விரைவில் செயல் பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: காலாவதியான பொருள்கள் நுகர்வோரிடம் விற்பனை செய்யப்படுவதாகவும், இதை தடுக்க தமிழகம் முழுவதும் நுகர்வோர் ஆணையம் விரைவில் செயல் பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நுகர்வோர்கள் நிவாரணம் தேடும் அந்த அமைப்புக்கு ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தான் கடைகளில் பொருட்கள் சரியில்லை என்றால் புகார் அளிக்க வேண்டிய அமைப்பு ஆகும். காலாவதி பொருட்கள், விலை அதிகம் விற்பது, சேவை குறைபாடு, பொருட்கள் சரியில்லாதது, பொருட்களை ஏமாற்றி தலையில் கட்டுவது, போலியான விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றுவது போன்ற செயல்களை செய்யும் கடைகக்கார்கள் அல்லது நிறுவனங்கள் மீது நுகர்வோர் ஆணையத்தில் (கோர்டு) புகார் அளித்து நுகர்வோர்கள் நிவாரணம் பெற முடியும். ஆனால் கடந்த 2 வருடங்காக நுகர்வோர் ஆணையம் பல மாவட்டங்களில் செயல்படாமல் முடங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.

TN government should take action to make the Consumer Authority act as soon as possible

திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரம்மா இதுபற்றி கூறும் போது, தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் நுகர்வோர் நல ஆணையர்கள் இல்லாததால் செயல்படாமல் உள்ளது. குறிப்பாக மொத்தம் 35 மாவட்டங்கள் முன்பு இருந்தன. இப்போது புதிதாக சில மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிருக்கும் சேர்த்து நுகர்வோர் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

தற்போதைய நிலையில் பல மாவட்டங்களில் நுகர்வோர் ஆணையர்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். புதிய ஆணையர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் முடங்கி உள்ளது. நுகர்வோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக சமூக ஆர்வலர்கள் இரண்டு பேர் உள்ளனர். அவர்கள் பழைய கேஸ்களுக்கு வாய்தா அனுப்பும் பணிகளை மட்டுமே செய்கிறார்கள். புதிய கேஸ்களுக்கு ஆணையர் இருந்தால் தான் விசாரிக்க முடியும் என்பதால் அவை விசாரணைக்கு வராமல் கிடப்பில் உள்ளன. திருல்வேலி மாவட்டத்தில் மட்டும் 100 கேஸ்கள் இப்படி உள்ளன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கேஸ்கள்இப்படி நிலுவையில் உள்ளன.

கொரோனா காலத்தில் முடங்கிய நுகர்வோர் ஆணையம் இதுவரை செயல்படாமல் உள்ளது. இதனால் அதிக விலையில் பொருட்களை விற்கும் நிறுவனத்தின் மீது வழக்கு போட முடியாத நிலையில் மக்கள் தவிக்கிறார்க்ள். தற்போது கொரானா காலத்தில் விற்பனை ஆகாதப்பொருள்களை தற்போது நுகர்வோரிடம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன. இதனால் நுகர்வோர்க்கு உடல் பாதிப்பு மற்றும் மரணம் கூட ஏற்படுகிறது.

TN government should take action to make the Consumer Authority act as soon as possible

ஹோட்டல்களில் Water bottle மற்றும் Packing பொருள்களுக்கு GST என நுகர்வோர் உரிமை பறிக்கப்படுகிறது. கேட்பாரின்றி கிடக்கும் நுகர்வோர் ஆணைத்தை செயல் படுத்த வேண்டும். திருநெல்வேலி உட்பட 25 மாவட்டங்களில் நுகர்வோர் ஆணையம் கடந்த 2 ஆண்டுகளாக ஆணையத் தலைவர் நியமனம் செயல்படவில்லை. எனவே பாய் விரித்து படுத்து உறங்கும் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை" என்று வேதனை தெரிவித்தார்.

இதனிடையே நீதிபதி ஆர்.சுப்பையாவை, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவராக நியமித்து தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் நியமித்து உத்தரவிட்டது அதைத் தொடர்ந்து, நுகர்வோர் குறைதீர்ஆணையத்தின் தலைவராக ஜூலை 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+