பர்த் டே பார்ட்டி..! மண்டைக்கேறிய மதுபோதை! ஒரே அடி... பிறந்த நாளே இறந்தநாளாக மாறிப்போன சோகம்..!
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பிறந்தநாள் மதுவிருந்தில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை நண்பன் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில், பிறந்தநாளே இறந்தநாளாக மாறிய பரிதாபகரமான நிகழ்வால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (21). இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்தார்.
பிறந்தநாளான நேற்று மாரிமுத்து தமது நண்பர்களுக்கு மதுவிருந்து வைத்தார். அலமாதி ஏரியில் மாரிமுத்து தமது நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி பின்னர் மது அருந்தியுள்ளனர்.

திருவள்ளூரில் அதிர்ச்சி
அப்போது திடீரென நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ராமமூர்த்தி பர்த்டே பேபி மாரிமுத்துவை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரும் மாரிமுத்துவை சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இளைஞர் கொலை
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நாளாக மாறிய பிறந்தநாள்
இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய பர்த்டே பேபி பிறந்தாளிலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் பரபரப்பு
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லை மீறிச் செல்வது வழக்கமாகி வருகிறது. முன்பெல்லாம் பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள் முகத்தில் கேக் பூசுவது என்ற வழக்கம் மாறி தற்போது பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்களை தாக்குவது, கன்னத்தில் அடிப்பது, பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது என்று மாறிவிட்டது. இந்நிலையில் மது விருந்தில் இளைஞரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications