வீட்டு மாடியில் சரஸ்வதி..செல்போன் இஎம்ஐக்காக வெங்கடேசன் பார்த்த வேலை! திடுக்கிட்டுப் போன திருவள்ளூர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே செல்போன் தவணை கட்டணம் கட்டுவதற்காக பெண்ணை அடித்து கொலை செய்து தலைமறைவாக இருந்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காதலியிடம் செல்போன் மூலம் பேசியதை வைத்து அந்த இளைஞரின் இருப்பிடத்தை கண்டறிந்துள்ளனர் போலீசார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (55). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி அவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்
இந்நிலையில் நேற்றைய தினம் சரஸ்வதி தான் குடியிருக்கும் மேல் மாடியில் வாடகை விடப்பட்டு இருப்பதால் அந்த இடத்தில் சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வரவில்லை. இதனையடுத்து உறவினர்கள் சென்று வீட்டில் பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் கொலை
பின்னர் ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரஸ்வதி அணிந்திருந்த செயின் கம்பல் செல்போன் திருடு போனதை கண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சரஸ்வதி மாடிக்குச் சென்ற சமயத்தில் இளைஞர் ஒருவர் சரஸ்வதி வீட்டின்மேல் மாடியில் நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது சரஸ்வதி காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை அந்த மர்ம வாலிபர் பிடுங்க முற்பட்டுள்ளார். ஆனால், சரஸ்வதி நகைகளை பிடுங்க விடாமல் போராடியுள்ளார்.
நகைக்காக கொலை
அப்போது தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரஸ்வதியை அந்த வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்த கிராமத்தில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்ற வாலிபர் சரஸ்வதியை கொலை செய்து நகை பறித்து கொண்டு தப்பியது தெரிய வந்தது. இதனை அடுத்து வெங்கடேசனை காவல்துறையினர் சம்பவம் நடந்து சில மணி நேரங்களில் கைது செய்தனர்.
இளைஞர் கைது
முன்னதாக கடைசியாக சரஸ்வதி செல்போனில் இரண்டு புதிய நம்பருக்கு பேசி போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அத்தகைய நம்பர்களை ஆராய்ந்தனர். அதில், அந்த போன் சிக்னல் சென்னை அரும்பாக்கம் பகுதியில் காட்டியுள்ளது. அப்பகுதியில் ஆட்டோவில் படுத்திருந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது செல்போன் உடைந்ததால் மாத தவணை கட்டுவதற்கு வழி இல்லாமல் இருப்பதாலும், தன் காதலிக்கு செல்போன் பேசுவதற்கு இல்லாததால் சரஸ்வதியின் நகைகளை கொள்ளை அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மொபைல் தவணைக்காக கொலை
இதனையடுத்து அவர் அடகு வைத்த நகைகளை போலீசார் மீட்டு ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். புதிய செல்போன் வாங்குவதற்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து கொலை செய்து அவர் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காதலியுடன் பேசும் போது தான் வெங்கடேசனின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications