திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு வேலை வாங்கி தருவதாக முகநூலில் விளம்பரம்.. ரூ 25 லட்சம் மோசடி.. இளைஞர் கைது.. விசாரணையில் திடுக்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முகநூலில் விளம்பரம் செய்து 70-க்கும் மேற்பட்டோரிடம் ரூ 25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயநாதன். இவரது மகன் வேதாச்சலம் (26). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் சென்னை கே கே நகர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை கண்டார். இதையடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

தஞ்சாவூர் ஆட்சியர் பெயரை பயன்படுத்தி கொரோனா நிவாரண நிதி கேட்டு மோசடி.. போலீஸார் வலை தஞ்சாவூர் ஆட்சியர் பெயரை பயன்படுத்தி கொரோனா நிவாரண நிதி கேட்டு மோசடி.. போலீஸார் வலை

தனது பெயர்

தனது பெயர்

அப்போது வேதாச்சலத்திடம் பேசிய நபர் தான் சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி (35) என அறிமுகம் செய்து கொண்டார். ரூ 60 ஆயிரம் செலுத்தினால் கே கே நகரில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

பாலாஜி

பாலாஜி

இதை உண்மை என நம்பிய வேதாச்சலம், பாலாஜியின் வங்கி கணக்கிற்கு ரூ 54 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாச்சலத்தின் இ மெயில் முகவரியில் வேலையில் சேருவதற்கான ஆணையை அனுப்பி இருந்தார்.

பணி நியமன ஆணை

பணி நியமன ஆணை

இதனால் மகிழ்ச்சி அடைந்த வேதாச்சலம் அந்த ஆணையை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். அப்போதுதான் தெரிந்தது இது ஒரு போலியான ஆர்டர் என்பது. மேலும் இந்த மருத்துவமனையிலிருந்து தாங்கள் எந்த ஒரு பணி நியமன கடிதத்தையும் அனுப்பவில்லை என தெரிவித்தனர்.

ஏமாற்றிய நபர்

ஏமாற்றிய நபர்

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பது வேதாச்சலதத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பாலாஜிக்கு போன் செய்தார். ஆனால் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருவள்ளூரில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் செய்தார்.

54 பேர்

54 பேர்

இதையடுத்து பாலாஜியை திருவள்ளூர் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை நேற்றைய தினம் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே வேலை வாங்கி தருவதாக 18 பேரிடமும், இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக 54 பேரிடமும் ரூ 25 லட்சம் பெற்றுக் கொண்டு பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

English summary
Tiruvallur police arrested youth for cheating 25 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X