உங்க கனவை சொல்லுங்க அரசு திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.. குடும்பத்தில் 3 பேருக்கு சான்ஸ்
சென்னை: திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ள புதிய மக்கள் தொடர்பு திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.

உங்க கனவை சொல்லுங்க திட்டம்
அப்போது அவர் பேசும்போது, தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள், மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளன.. அந்த வரிசையில், அடுத்தகட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு புதுமையான திட்டத்தை தொடங்க உள்ளார். அந்த திட்டத்தின் பெயர் "உங்க கனவை சொல்லுங்க".
இந்த திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MKS) இந்த நாட்டிற்கு வழங்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகப் பார்க்க வேண்டும்.
5 ஆண்டு கால திமுக ஆட்சி
ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட கனவுகள் இருக்கும். தங்களுக்காகவும், குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும், மாநிலத்திற்காகவும் மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள்.
உதாரணமாக, வெளிநாடுகளில் உள்ள சாலைகள் மிகச் சிறப்பாக இருப்பதை நாம் பேசுகிறோம். ஆனால், "எங்கள் ஊரில் அப்படி ஏன் இல்லை?" என்ற கேள்வி பலரிடமும் இருக்கும். அந்த வகையான எதிர்பார்ப்புகள், கனவுகள் அனைத்தையும் அரசுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக தன்னார்வலர்கள்
"உங்க கனவை சொல்லுங்க" திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, வீடு வீடாகச் சென்று மக்களின் கனவுகளை கேட்டறிய 50 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார்படுத்தப்பட உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் படிவங்களை வழங்குவார்கள். அந்த படிவத்தில், ஒரு குடும்பம் தங்களின் மூன்று முக்கிய கனவுகளை பதிவு செய்யலாம். அத்துடன், இளம் தலைமுறையினரின் கனவுகளையும் தனிப்பட்ட முறையில் கேட்டறிந்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் அரசு செயல்பட உள்ளது.
இதற்காக ஒரு பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த இணையதளம் ஜனவரி 11 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது... ஜனவரி 12ம் தேதி முதல் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தும் அவர்களது கனவுகள், எதிர்பார்ப்புகள் தொடர்பான கருத்துகள் பெறப்படும். 2 நாட்களுக்கு பிறகு, சேகரிக்கப்பட்ட படிவங்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு, அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
2030ம் ஆண்டு தமிழகம்
தமிழக அரசு ஏற்கனவே பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், மக்களிடையே இன்னும் பல எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பானதே. அந்த எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு, எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை முன்னேற்றும் வகையில் இந்த "உங்க கனவை சொல்லுங்க" திட்டம் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமையும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பாடியநல்லூரில் துவக்கம்
இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து கருத்துகளையும் உடனடியாக நிறைவேற்றுவது அல்ல என்றாலும், 2030ஆம் ஆண்டில் தமிழகம் எப்படியொரு மாநிலமாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், நீண்டகால திட்டமிடலுக்காக இந்த கருத்துகள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கினார்.
அந்தவகையில் "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தினை இன்று திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் இன்றைய தினமே தொடங்கி வைக்கப்படும்.
இந்நிலையில், "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தினை இன்று திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின், இன்றைய தினம் மக்களின் கனவுகளை கேட்டு நிறைவேற்ற தொடங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று பெருமிதம் தெரிவித்தார்..
திருவள்ளூரில் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்த நிலையில், தமிழக அமைச்சர்களால், அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்றைய தினமே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது..
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications