கிராம நத்தம் புறம்போக்கு.. ரேஷன் கடைக்குகூட போக முடியல.. திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில் இந்த நிலைமை?
திருவண்ணாமலை: கிராம நத்தம் அரசு புறம்போக்கு நிலத்தில் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் கிராமம், நேரு நகர் பகுதி பொதுமக்களின் அடிப்படை சாலை பிரச்சனைக்கு வழிவகுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சருக்கு மக்கள் நலப்பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இந்திய ஜனநாயக மக்கள் பேரவையின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் கிராமத்தில் உள்ள நேரு நகருக்கு செல்லும் பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கிராம நத்தம் புறம்போக்கு வகைப்பாடு
அந்த கடிதத்தில், "திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கலசப்பாக்கம் கிராமத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நேரு நகர் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த நேரு நகருக்கு செல்லும் 3.6 மீட்டர் அகலம் கொண்ட பாதையானது கிராம நத்தம் சர்வே எண். 191/5A & 5B, க்கு உட்பட்ட அரசு புறம்போக்கு வகைப்பாட்டை சார்ந்தது.
ஆகவே 3.6 மீட்டர் அகலம் கொண்ட இச்சாலையை பயன்படுத்திக் கொள்ள கடந்த 2011 ஆம் கலசப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் செயல்முறை ஆணை மூலம் முறையாக சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த வீட்டுமனை பிரிவு விற்கப்பட்டு இதில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். இச்சாலையானது நேரு நகரில் வசிக்கும் மக்களுக்கான மிக முக்கிய பயன்பாட்டு சாலையாக இருந்து வந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நேரு நகருக்கு செல்லும் பாதைக்கு முன் பகுதியில் அமைந்துள்ள கிராம நத்தம் அரசு புறம்போக்கு நிலத்தில் கலசப்பாக்கம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டன.
கலசப்பாக்கம் வட்டாட்சியர்
இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகும் நேரு நகர் பொதுமக்கள் தங்களது பயன்பாட்டிற்கான (3.6மீட்டர்) பாதையை எந்த ஒரு இடையூறும் இன்றி வழக்கம்போல் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கான சுற்றுச்சுவர் கட்டும் பணியானது தொடங்கப்பட்டது.
இந்தச் சுற்றுச்சுவரானது நேரு நகர் மக்களின் பொது வழி பயன்பாட்டிற்காக பஞ்சாயத்தினரால் அனுமதி வழங்கப்பட்ட வழிப்பாதையை பயன்படுத்த முடியாதபடி அமைவதை அப்பகுதி பொதுமக்கள் கலசப்பாக்கம் வட்டாச்சியரிடம் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு இந்த வழிப்பாதை ஆனது பஞ்சாயத்தின் மூலம் நேரு நகர் மக்களின் வழிப்பாதை பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது என்பதனை வலியுறுத்தி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்பொழுது கலசப்பாக்கம் வட்டாட்சியராக உள்ளவர்தான் 2012 ஆம் ஆண்டும் வட்டாட்சியராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவருக்கு நேரு நகர் மக்களுக்கான முக்கிய பயன்பாட்டுச் சாலை என்பது நன்கு தெரியும். இருந்தும் இதனை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து சுற்றுசுவர் கட்டும் பணியினை மேற்கொண்டு உள்ளார்.
நேரு நகர் மக்களின் அன்றாட சிக்கல்
நேரு நகர் மக்களின் பலத்த எதிர்ப்பினை சமாளிக்கும் பொருட்டு அப்பொழுது ஆட்சியில் இருந்த கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்களின் சுயலாபத்திற்காக மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை பலவகையில் பேசி சமாதானம் செய்து மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி சமரசம் செய்து சுற்றுச் சுவர் பணி தடைபடாமல் நடைபெறும் வகையில் செயல்பட்டுள்ளார்கள்.
இதன் காரணமாக நேரு நகர் வாசிகளும் தங்கள் நகருக்கு செல்லும் வகையில் மாற்றுப் பாதையாக வக்பு வாரியத்திற்கு சொந்தமான பாதையினை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு வக்பு வாரியத்தினர் இந்த இடமானது வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்றும் இனிமேல் இந்த பாதையை வெளியாட்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறி நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவினை பெற்று சுவர் எழுப்பி பாதையை அடைத்து விட்டனர்.
மாற்றுப்பாதையும் அடைப்பு
மேற்கூறிய செயலால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான நேரு நகர் வாசிகள் தங்களுக்கு பஞ்சாயத்தால் வழங்கப்பட்ட சாலையை பறிகொடுத்த நிலையில் மற்றும் மாற்றுப் பாதையும் அடைக்கப்பட்ட நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக நேரு நகருக்கு அருகில் உள்ள மற்றவர்களுக்கு சொந்தமான காலி மனைகள் மற்றும் அருகில் உள்ள ஆற்றினை தங்களின் பயன்பாட்டிற்கான பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களின் வீட்டிற்கு முறையான பாதையில் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார்
நேரு நகருக்கு செல்லும் இந்த அணுகு சாலையானது 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பக்கம் உள்ள ஆற்றுக்கும், கோயிலுக்கும், ஆற்றுக் கோயில் திருவிழாவுக்கும், ரேஷன் கடைக்கும், குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கும், மற்றும் தென் பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், பில்லூர், பழங்கோயில், பொன்னாந்தாங்கல், கீப்பத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பயன்பாட்டுச்சாலையாக இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் (இத்துடன் இணைத்து தங்களுக்கு அனுப்பி உள்ள கடிதங்கள் மூலம்) முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலர், கோட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித் துறை அதிகாரிகள் என அனைவருக்கும் பல தரப்பிலிருந்தும் பலமுறை கடிதங்கள் எழுதியும், இதுவரை எந்த வகையிலும் இந்த மக்களுக்கு எந்த விதமான தீர்வும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
அடிப்படை சாலை பிரச்சனைக்கு தீர்வு வேண்டும்
ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், மேற்கண்ட மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, கலசபாக்கம் கிராமம், நேரு நகர் பகுதி பொதுமக்களின் அடிப்படை சாலை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ஏற்கனவே புழக்கத்தில் இருந்த பயன்பாட்டுச் சாலையை மீட்டெடுத்து பொதுமக்கள் வழக்கம்போல பயன்படுத்தும் வகையில் உரிய வழிவகை செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications