6 வயது மகளை கரும்பால் அடித்து கொலை செய்த கொடூர பேய்.. திருவண்ணாமலையில் பகீர்
திருவண்ணாமலை: 6 வயது மகளை கரும்பால் அடித்து கொலை செய்த கொடூர தாயை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஓட்டுநர் பூபாலன். இவருக்கும் சுகன்யா என்பவருக்கும் இடையே கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு எட்டு வயதில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் பிரசன்னதேவ் என்ற மகனும், ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் ரித்திகா என்ற மகளும் உள்ளனர்.
பூபாலன், சுகன்யா இடையே கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சுகன்யா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவாராம். அவரை பெற்றோர் சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழ அனுப்பி வைப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலன் சாலை அமைக்கும் பணிக்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
சுகன்யா தனது மகள் ரித்திகாவிடம் ஏதோ வேலை கூறியுள்ளார். அதை கவனிக்காத சிறுமி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் சிறுமியை கரும்பால் அடித்து தாக்கியுள்ளார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் பார்த்து தடுத்து நிறுத்தி குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது வழியிலே சிறுமி ரித்திகா இறந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே ரித்திகா இறந்தாள். பின்னர் உடலை தாய் வீடான கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்துக்கு எடுத்துச்சென்றார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெறையூர் காவல் நிலைய போலீசார் சுகன்யாவை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இறந்த குழந்தை ரித்திகாவின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பெற்ற தாயே குழந்தையை ஆத்திரத்தில் கரும்பால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுகன்யா கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ரித்திகாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பூபாலன் வேலைக்காக வெளியே சென்று வரும் நேரத்தில் தாய் சுகன்யா செல்போனில் பேசுவது தொடர்பாக 6 வயது சிறுமி அவரது தந்தையிடம் கூறியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த தாய் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே கடுமையாகத் தாக்கி வந்துள்ளார்.
வீட்டிற்குள் குழந்தை கலகம் செய்வதாக எண்ணி ஆத்திரமடைந்த சுகன்யா 6 வயது சிறுமி ரித்திகாவை கரும்பால் அடித்து தாக்கியுள்ளார். இதில் சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே












Click it and Unblock the Notifications