திருவண்ணாமலை கோயில் சர்ப்ரைஸ்.. இன்று பௌர்ணமி கிரிவலம்.. விழுப்புரத்தில் 9.25 மணிக்கு ரெடியா? ஹேப்பி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பவுர்ணமி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இன்று பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.. இந்த கிரிவலத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து, திருவண்ணாமலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், பக்தர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வந்துள்ளது.
திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். அதாவது, ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்கிறார்கள்.. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டதாம்.. அந்தவகையில, திருவண்ணாமலையின் வயதை 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிடுகிறார்கள ஆராய்ச்சியாளர்கள்.
சிறப்புகளும் - முக்கியத்துவமும்

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. நடுநாட்டு தலங்களுள் முதன்மையானது இந்த திருவண்ணாமலை.. பஞ்சபூதத் தலங்களுள் இதனை அக்னித் தலம் என்றும், நால்வராலும் பாடப்பட்ட தலம் இதுவென்றும் போற்றப்படுகிறது.
இன்னும் பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவண்ணாமலை கோயிலில் குழந்தை பாக்கியம் வேண்டியும் வருவார்கள். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட்டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இப்படி செய்வதால், பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
பௌர்ணமி - கிரிவலம்
அதேபோல, ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்வது வழக்கமாகும்.. இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்கள், பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.. விசேஷமான இந்த பௌர்ணமி தினத்தன்று,14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து அருணாச்சலேஸ்வரரை பக்தர்கள் வழிபட்டு செல்வார்கள்.
அதன்படி, இன்று பௌர்ணமி தினம் என்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு திரண்டு கொண்டிருக்கிறார்கள்.. வழக்கமாக தமிழக அரசு பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில்களை ஏற்பாடு செய்து தரும்.. அந்தவகையில், இன்றைய தினம், தமிழக அரசு சார்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.. அதேபோல, தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே ஸ்பெஷல் அறிவிப்பு
இது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று அதாவது "மார்ச் 13ம் தேதி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06130/06129 ) 13 ஆம் தேதி காலை 9:25 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படுகிறது. அந்த ரயில் அன்றைய தினம் மதியம் 11.10 மணியளவில் திருவண்ணாமலையை சென்று சேருகிறது. இதே போல திருவண்ணாமலையிலிருந்து மதியம் 12:40 மணிக்கு புறப்படும் ரயிலானது அன்றைய தினம் மதியம் 2:15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடைகிறது.
பக்தர்கள் மகிழ்ச்சி
இந்த சிறப்பு ரயிலில் 8 மெமு வகை ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பல்லபட்டு, அய்யனூர், திருக்கோவிலூர், தண்டறை வழியாக திருவண்ணாமலையை சென்று சேருகிறது. எனவே திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications