அதிமுக தொண்டர்களுக்கு பன்னீர்செல்வத்தை பிடிக்கவில்லை.. "இதுதான் காரணம்.." காமராஜ் ஆவேசம்
திருவாரூர்: திமுகவை ஓ.பன்னீர் செல்வம் மறைமுகமாக ஆதரித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பில் இருக்கிறது. இதனிடையே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களிடம் தீவிரமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுப்பயணம்
இன்னும் சில நாட்களில் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும், மதுரையில் தொடங்கி தென் மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் இப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்த தொடங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஆலோசனை கூட்டம்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கின் முடிவுக்கு பின், எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட அதிமுகவின் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய, நகர செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டார்.

தீர்மானம்
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் சமூக விரோதச் செயல்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்கத் தவறிய திமுக ஆட்சியை கண்டிப்பது, சொத்துவரி, வீட்டு வரி, பால், மின் கட்டணம் உயர்வு ஆகியவற்றை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி, அம்மா மினி கிளினிக் போன்ற ரத்துசெய்யப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காமராஜ் பேச்சு
முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில், அதிமுகவிற்கு தேய்மானம் இருக்கிறது என்று யாராலும் சொல்லமுடியுமா? அதிமுக வளர்பிறை வளர்ந்து கொண்டே இருக்க கூடிய இயக்கம். அதிமுகவை எதிர்த்து தேர்தலில் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த திமுகவை, எடப்பாடி பழனிசாமி எதிர்த்து வருகிறார். ஆனால் ஓபிஎஸ் மறைமுகமாக திமுகவை ஆதரித்து வருகிறார். இதற்காக தான் அதிமுக தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வம் மீது கோபப்படுகிறார்கள். இந்த கோபத்தில் நியாயம் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications