திருப்பதி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருப்பதி மலையில் புதையலா.. 80 அடிக்கு சுரங்கப்பாதை.. ஒரு வருடமாக போட்ட பலே ஸ்கெட்ச்.. உறைந்த போலீஸ்

சேஷாசலம் மலையில் 80 அடி சுரங்கப்பாதை அமைத்த 6 பேர் கைதானார்கள்

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி மலையில் புதையல் இருக்கிறது என்று ஒரு சாமியார் சொன்னாராம்.. இதை கேட்டு ஒரு வருஷமாக ஆட்களை வைத்து, சுரங்கப்பாதை தோண்டி உள்ளார் ஒருவர்..!

ஆந்திர மாநிலம் திருப்பதி எம்ஆர் பள்ளியை சேர்ந்தவர் மக்கு நாயுடு... இவர் ஒரு மேஸ்திரி.. அந்த பகுதியிலேயே சில ஆட்களை கூலிக்கு வைத்து வேலை பார்த்து வருகிறார்.

மேஸ்திரிக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்துள்ளது.. அத்துடன் பணம் சேர்க்கும் பேராசையும் அதிகமாக இருந்துள்ளது.. எனவே, பணம் சேர வேண்டும் என்று நெல்லூரை சேர்ந்த ராமையா என்ற சாமியாரை சென்று சந்தித்துள்ளார்.

மெச்சிகோவில்... கள்ளக்காதலியை சந்திக்க... அவரது வீட்டின் படுக்கையறை வரை... சுரங்கப்பாதை அமைத்த நபர்!மெச்சிகோவில்... கள்ளக்காதலியை சந்திக்க... அவரது வீட்டின் படுக்கையறை வரை... சுரங்கப்பாதை அமைத்த நபர்!

 சுரங்கப்பாதை

சுரங்கப்பாதை

அந்த சாமியார், திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாசல மலையில், ஒரு பெரிய புதையல் இருக்கிறது, 120 அடி தூரத்துக்கு சுரங்கப்பாதை தோண்டினால், 2 ரூம் இருக்கும்.. அந்த 2 ரூம்களிலும் வைரமும், வைடூரியங்களும் கொட்டி கிடக்கும் என்றும் சொல்லி உள்ளார்.. சாமியாரின் பேச்சை கேட்டு, மேஸ்திரியும், புதையலை எடுக்க முடிவு செய்தார்.

 சொந்த மாநிலம்

சொந்த மாநிலம்

அதற்காக சாமியார் சொன்னதுபோலவே, சுரங்கம் தோண்டினார்.. ஆனால் தன் ஊரை சேர்ந்தவர்களையே வேலைக்கு வைத்தால், விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்று நினைத்து, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்த கூலியாட்களை வைத்து சுரங்கப்பாதை தோண்ட ஆரம்பித்தார்..

கர்நாடகம்

கர்நாடகம்

அதேசமயம், இந்த கூலியாட்களையும் ஒரு மாசத்தில் மேஸ்திரி மாற்றிவிடுவாராம்.. மீண்டும் வேறு ஒரு டீமை உள்ளே இறக்குவார்களாம்.. இப்படியே ஒரு வருஷமாக சுரங்கம் தோண்டி வந்துள்ளார்.. கிட்டத்தட்ட 80 அடிக்கு தோண்டி தோண்டியபோது பெரிய பாறை ஒன்று தட்டுப்பட்டுள்ளது.. இந்த பாறையை கூலியாட்களால் அகற்றவே முடியவில்லை.. அதனால், கர்நாடகவை சேர்ந்த 5 திறமையான 5 கூலியாட்களை 2 நாளைக்கு முன்பு அழைத்து வந்துள்ளார்..

கைது

கைது

அப்போதுதான் பொதுமக்கள் இதை கவனித்துள்ளனர்.. உடனடியாக திருமலை போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர்.. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மேஸ்திரியையும், கர்நாடகாவில் இருந்து வந்த 5 கூலி தொழிலாளர்களையும் கைது செய்தனர்.. பிறகு அந்த சுரங்கத்தை நேரடியாக சென்று பார்வையிட்டபோதுதான் 80 அடி சுரங்கப்பாதை தென்பட்டுள்ளது..

சேஷாசலம்

சேஷாசலம்

இப்போது 6 பேரும் ஜெயிலில் உள்ளனர்.. சேஷாசலம் மலையில் ஏற்கனவே போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.. இவர்களை மீறி எப்படி ஒருவருஷமாக சுரங்கப்பாதை அமைக்க முடிந்தது? 80 அடிக்கு பாதை தோண்ட முடிந்தது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது? இந்த சுரங்கப்பாதை விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

English summary
80 ft Tunnel to collect Treasure on Tirupati Seshachalam and six arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X