திருமலை திருப்பதியில் திகைத்த மக்கள்.. அதைவிடுங்க, தேவஸ்தானம் தரும் தித்திப்பு நியூஸ்.. ஆஹாஹா லட்டு
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இந்த நடவடிக்கையானது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. இதற்கு நடுவில், போலீஸ்காரர் ஒருவர் செய்த செயலை கண்டு, பக்தர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. என்ன நடக்கிறது திருப்பதியில்?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த லட்டு ஏழுமலையான் கோயிலிலேயே 3 வகைகளில் தயார் செய்யப்படுகிறது.

லட்டு ஸ்பெஷல்: இதில் 2வது லட்டு 175 கிராம் எடையிலும் தயாராகிறது. இந்த 2வது லட்டுதான், பக்தர்களால் விரும்பப்படும் பெரிய லட்டு ஆகும். இது ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும்
லட்டுக்களை பெறுவதற்காகவே தேவஸ்தானத்தின் சார்பில் பிரத்யேகமாக கவுன்டர்கள் உள்ளன.. ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்கி செல்வது வழக்கமாக இருந்த நிலையில், ஒரு ஆதார் கார்டுக்கு 2 லட்டுகளை வாங்கி செல்லலாம் என்றும், சாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
லட்டு கவுண்ட்டர்: தற்போதுவரை ஆதார் எண் அடிப்படையில் லட்டுகள் வழங்கப்பட்டு வந்தாலும், லட்டு கவுண்டர்களில் பிரத்யேக இயந்திரங்கள் வைக்கப்பட்டு, ஸ்கேனிங் மூலம், பக்தர்களுக்கு லட்டு வழங்கப்போகிறார்களாம்.. இதற்காக பிரசாத கவுண்டரில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன..
இயந்திரம் மூலம் லட்டுகளை விரைந்து பெற முடியும் என்றும், இதன்காரணமாக நீண்ட நேரம் கியூவில் நிற்க வேண்டிய அவசியமில்லை, புரோக்கர்களின் தொல்லையும் குறையும் என்றும் தேவஸ்தானம் நம்புகிறது. எனவே, இனிமேல் அதிக லட்டுகள் வேண்டுமானால், கவுன்டர்களில் இருந்தே வாங்க வேண்டும். இப்போதைக்கு 6 கவுன்டர்களில் மட்டுமே ஸ்கேனிங் மிஷின்கள் உள்ள நிலையில், இதற்கான வரவேற்பை பொறுத்து, அனைத்து கவுண்டர்களிலும் நிறுவ தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாம்.

ஆன்லைன்: இதனிடையே, இன்னொரு திருப்பதி விவகாரம் ஒன்று இணையத்தில் சலசலப்பை தந்து கொண்டிருக்கிறது.. அதாவது, ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், ஆன்லைனில் ரம்மி விளையாடியிருக்கிறார்..
பிரம்மோற்சவம் நடந்து வருவதால், பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அப்படி பாதுகாப்பு பணிக்கு வந்த ஒரு போலீஸ்காரர், டியூட்டியை பார்க்காமல், தன்னுடைய செல்போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார்.
பரபரப்பு: இதைப்பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.. போலீஸ்காரர் ரம்மி விளையாடுவதை, சில பக்தர்கள் வீடியோவும் எடுத்து இணையத்தில் பதிவிட்டு விட்டனர்.. இந்த வீடியோவும் பரபரப்பாக இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், தினம் தினம் இதுபோன்ற ஏதாவது ஒரு நிகழ்வு, திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்தை பெற்றுவிடுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications