வரதனுக்கு "வரம் தரும் கைகள்.." ஏழுமலையானுக்கு பக்தர் நன்கொடை.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைர ஆபரணத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
Recommended Video
வைரம் மாணிக்கம் மற்றும் பவளத்தில் செய்யப்பட்ட 5.3 கிலோ எடையுள்ள கை உருவம் கொண்ட ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
வெங்கடேச பெருமாளை தரிசித்த பிறகு 3 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கைகளை பெயர் சொல்ல விரும்பாத அந்த பக்தர் வழங்கி உள்ளார்.

திருமலையான் கோயில்
பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரிய திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உண்டியல் காணிக்கையும் நாள்தோறும் இங்கு கோடிக்கணக்கில் பெறப்படும். கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனத்தில் வழிபட விரும்பும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன அனுமதி அட்டை தற்போது ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டும் திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் செல்வது வழக்கம்.

திருப்பதி தேவஸ்தான சொத்து
இந்நிலையில் திருப்பதி திருமலையான் தேவஸ்தானத்தின் சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டன. தேவஸ்தானத்துக்கு சொந்தமான 1,128 சொத்துக்களில் 8 ஆயிரத்து 88 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 1974-ம் ஆண்டு முதல் 2014 வரை 141 இடங்களில் உள்ள சொத்துகளில் 335.23 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 61 இடங்களில் 293.02 ஏக்கர் விவசாய நிலமும், 80 இடங்களில் விவசாய நிலமல்லாத 42.21 ஏக்கர் நிலங்களும் ரூ.6 கோடியே 13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி 987 இடங்களில் 7753.6 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 172 இடங்களில் உள்ள நிலம் வேளாண் சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது. 1792.39 ஏக்கர் விவசாய நிலமும், 5,961 விவசாயமல்லாத நிலமும் திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

5.3 கிலோ நகைகள் நன்கொடை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பலர் தங்களின் சொத்துகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இவை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து பாதுகாப்புத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்துவிட்டு திருமலையான கோயிலுக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள "வரம் தரும் கைகள்" ஆபரணத்தை நன்கொடையாக வழங்கினார்.

நன்கொடை தந்த பக்தர் மகிழ்ச்சி
இந்த ஆபரணக் கைகள் 5.3 கிலோ எடையுள்ளது. இதில் வைரம், மாணிக்கம் மற்றும் பவளக் கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைகளை கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்து வழங்கி உள்ளார். இதை அன்போடு பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகிகள் இந்த தங்க கைகள் மிக முக்கியமான உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அந்த பக்தர் மகிழ்ச்சி அடைந்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications