திருப்பதி அருகே காதலனை கூலிப்படை வைத்து கடத்திய பெண்.. லாட்ஜில் இருந்தவருக்கு மறக்க முடியாத சம்பவம்
திருப்பதி: சித்தூர் மாவட்டம் பெனுமூர் ரேணுகா நகரை சேர்ந்த சீனிவாசலு என்பவர் மதனப்பள்ளியைச் காதலித்த சோனியா பானு என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் சோனியாவை திருமணம் செய்யாமல் காதலன் சீனிவாசலு கைவிட்டுவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த சோனியா, காதலன் சீனிவாசலுவை கூலிப்படையை வைத்து கடத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சித்தூர் மாவட்டம் பெனுமூர் ரேணுகா நகரை சேர்ந்த 31 வயதாகும் சீனிவாசலு என்பவர் திருப்பதி பெத்தக்காப்பு தெருவில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். சீனிவாசலுவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இந்த நிலையில் மதனப்பள்ளியைச் சேர்ந்த சோனியாபானு என்பவருடன் சீனிவாசலுவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சோனியா பானு ஏற்கனவே கல்யாணமானவர். அவரது கணவர் இறந்து விட்டார். இந்த சூழலில் சோனியா பானுக்கும் சீனிவாசலுவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் சீனிவாசலுவுக்கும், சோனியா பானுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 3 மாதங்களாக சீனிவாசலு, சோனியா பானுவுடன் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்துவிட்டாராம். இதனால் சீனிவாசலு தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று சோனியா பானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனினும் சீனிவாசலுவை திருமணம் செய்யுமாறு கேட்டாராம். ஆனால் அவர் மறுத்துவிட்டாராம். இதனால் சோனியா, சீனிவாசலுவை கடத்தி சென்று திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக மதனப்பள்ளிையச் சேர்ந்த பாபா பக்ருதீன், மோகித், ராஜேஷ், ரியாஸ், சந்திப் ஆகியோரின் உதவியை நாடினார். கூலிப்படையைச் சேர்ந்த இவர்களிடம் சீனிவாசலுவை கடத்துவதற்கு பல லட்சம் ரூபாய் பேரம் பேசினாராம். கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் சீனிவாசலுவின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளார்கள்.
நேற்று முன்தினம் சீனிவாசலு தனது தங்கும் விடுதியில் இருந்தார். அப்போது சோனியா பானு கூலிப்படையைச் சேர்ந்தவர்களுடன் காரில் சீனிவாசலுவின் தங்கம் விடுதிக்கு வந்திருக்கிறார்கள். பின்னர் நோட்டம் விட்ட அவர்கள், சட்டென சீனிவாசலுவை கூலிப்படையினர் உதவியுடன் குண்டுக் கட்டாக தூக்கி காரில் போட்டுக்கொண்டு கடத்தி சென்று விட்டார்களாம். தங்களது விடுதி உரிமையாளரை கடத்தி செல்வதை கண்ட ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சீனிவாசலுவை கடத்தி செல்லும் காரின் பதிவு எண்ணுடன் அந்தந்தப் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். தனிப்படைகள் அமைத்து காரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சீனிவாசலுவை கடத்தி சென்ற கார் அனக்காபள்ளி மாவட்டம் வயல் பாடு அருகே செல்வதை போலீசார் பார்த்தனர்.
உடனடியாக போலீசார் விரைந்து சென்று வயல்பாடு அருகே காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த சீனிவாசலுவை போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும் காரில் இருந்த சோனியா பானு, பாபா பக்ருதீன், மோகித், ராஜேஷ், ரியாஸ், சந்திப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது தான், சோனியா பானு முழு விவரத்தையும் கூறியிருக்கிறார். கடந்த 3 மாதங்களாக தன்னை தவிர்த்து வந்ததால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் இப்படி செய்தேன் என சோனியா போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனியா பானு உள்பட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடைத்தனர்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications