500 ரூபாய் நோட்டு! தட்டிலே வேண்டாம் உண்டியல்லேயே போடுங்க! ஓபிஎஸ்ஸிடம் சொன்ன திருப்பதி புரோகிதர்!
திருப்பதி : திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புரோகிதரின் தட்டில் 500 ரூபாய் நோட்டை போட்ட நிலையில், வேண்டாம் உண்டியலிலேயே போட்டுவிடுங்கள் என சைகை காட்டியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பிறராக அதிமுகவில் ஒற்றை தலைமையாக, நிரந்தர பொதுச் செயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற பரபரப்பு அதிமுகவின் நீண்ட காலமாகவே தொற்றிக் கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை தான் ஓங்கி இருக்கிறது.
இதனிடைய கட்சியில் நீண்ட காலமாக பயணிக்கும் ஓ.பன்னீர்செல்வமும் நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என தனது பலத்தை நிரூபிக்க போராடி வருகிறார். இதனால் அதிமுகவில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்
பரபரப்பான அரசியல் சூழலில் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் ஏன் வங்கி வரை அதிமுக நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு சட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கோவில் கோவிலாக சென்று வருகிறார் ஓ பன்னீர்செல்வம். ஆன்மீக நாட்டம் கொண்டவரான அவர் மாதத்தில் ஒருமுறையாவது பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியின் மறைவை முன்னிட்டு காசிக்குச் சென்று திதி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் அதன் பிறகு ராமேஸ்வரம் கோவில் சுவாமி தரிசனம் செய்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார் ஏற்கனவே திருப்பதி திருமலையில் முப்பது மணி நேரம் கழித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது.

சுவாமி தரிசனம்
நேற்று இரவு புதுச்சேரி பாஜக துணை முதல்வர் நமச்சிவாயம் உள்ளிட்டருடன் ஒரே விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த ஓபிஎஸ் இன்று காலை சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அவரை கோவில் நிர்வாகத்தினர் உரிய மரியாதையோடு வரவேற்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர். மூலவர் ஏழுமலையான் தரிசித்த பிறகு உப கோவில்களில் ஓ பன்னீர்செல்வம் மனம் உருக பிரார்த்தனை செய்தார். அப்போது கோவில் புரோகிதர் ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபாரதனை காட்டினார்.

சைகை செய்த புரோகிதர்
அப்போது ஓ பன்னீர்செல்வம் 500 ரூபாய் நோட்டு ஒன்றை புரோகிதரின் தீபத்தட்டில் வைத்தார். அதனை எடுக்குமாறு கூறிய புரோகிதர் உண்டியலில் போட்டு விடுமாறு சைகை செய்தார். இதை அடுத்து வைத்த 500 ரூபாய் நோட்டை மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து ஏழுமலையான் கோவில் பிரகாரங்களில் வளம் வந்த ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பக்தர்களும் ஆந்திர பக்தர்களும் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு சிரித்துக் கொண்டே ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்த நிலையில் பலரும் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications