மூச்சு விட முடியல.. வியர்த்துக் கொட்ட.. தள்ளாடி நடந்து சென்ற பவன் கல்யாண்.. திருப்பதியில் பரபரப்பு!
திருப்பதி: திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்த நிலையில், இந்த விவகாரத்தில் தீவிரமாக களமிறங்கிய பவன் கல்யாண், திருப்பதியின் புனிதத்தை மீட்டெடுப்பதற்காக 11 நாட்கள் விரதம் இருந்து ஏழுமலையானை தரிசிப்பேன் என அறிவித்திருந்தார். அதன்படி திருப்பதி மலைக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது நடக்க முடியாமல், வியர்த்துக்கொட்டி மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு, கோடிக்கணக்கான பக்தர்களால் போற்றப்படும் திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற பொருட்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளை பயன்படுத்தியதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாள், திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை இருப்பதாக ஆய்வக அறிக்கை ஒன்று வெளியானது.

தீவிரமாக கையில் எடுத்த பவன் கல்யாண்: திருப்பதி லட்டு சர்ச்சை நாட்டையே அதிர வைத்துள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தார். திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்ட இந்த தீட்டை சரி செய்யும் விதமாக திருப்பதி கோவிலை சுத்தம் செய்தார். மேலும், பரிகார தீட்சையாக11 நாள் விரதம் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லப்போவதாக அறிவித்தார் பவன் கல்யாண்.
திருப்பதி லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது மிகப்பெரிய பிரச்சனை. இதனை சாதாரணமாக விட முடியாது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் இந்து கோயில்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றன என ஜன சேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்து இருந்தார்.
11 நாள் விரதம்: நேற்றுடன் தனது 11 நாள் விரதத்தை நிறைவு செய்த பவன் கல்யாண், காவி உடையுடன் திருமலைக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து சென்றார். பவன் கல்யாண் திருமலைக்கு நடந்து சென்றபோது, படியேற முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சு விடவே பெரும் சிரமப்பட்டார். கடும் முதுகு வலியாலும் அவதிப்பட்டார். கடுமையாக அவருக்கு வியர்த்துக் கொட்டியது.
வியர்த்துக் கொட்டியது: உடல் முழுவதும் வியர்வையால் தொப்பலாக நனைந்திருந்த பவன் கல்யாண், வழியிலேயே ஆங்காங்கே அமர்ந்து அமர்ந்து பயணத்தை தொடர்ந்தார். பவன் கல்யாண் உடன் சென்ற குழுவினர் அவருக்கு தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுத்து உதவி செய்தனர். மேலும், அவருக்கு வியர்க்காமல் இருப்பதற்காக விசிறி விட்டபடியே சென்றனர்.

திருமலைக்கு நடந்து செல்ல சுமார் 3500 படிகளையும் சில செங்குத்தான பாதைகளையும் கடக்க வேண்டும். பவன் கல்யாண், ஆங்காங்கே நின்றும், அமர்ந்தும், நடக்க முடியாமல் நடந்து சென்றார். பவன் கல்யாண் பெரும் சிரமத்திற்கு இடையில் திருமலைக்கு நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முன்னதாக, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, லட்டுவில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் தொடர்பான தெளிவாக ஆய்வு அறிக்கை இல்லை என்றும் இதனை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் கடவுளை அரசியல் செய்ய வேண்டாம் எனவும் எந்த ஆதாரத்தை வைத்து மாட்டு கொழுப்பு கலைக்கப்பட்டது என்று பொதுவெளியில் பேசினீர்கள் என்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications