திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 2 பேர் பலியானதாக புகார்
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 2 பேர் பலியானதாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக உயிரிழந்த ஒரு நோயாளின் உறவினர் ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது பெயர் பிரகாஷ், என் பெரியம்மா யசோதா (67 வயது) சனிக்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் எடுக்கவில்லை.

இதனால் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். அவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, தனிமைப்படுத்துதல் வார்டில் வைத்திருந்தார்கள்.
இரண்டு நாளாக நன்றாகத்தான் இருந்தார். இன்று காலை கூட டீ, பிஸ்கட் எல்லாம் சாப்பிட்டார். திடீரென சுமார் 10மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து பம்பிங் போதவில்லை என்றார்கள். மின்சாரம் வந்தால் தான் சரியாகும் என்றார்கள்.
இதுவரை மூன்று பேர் இறந்துவிட்டார்கள். 2 பேரை ஆபத்தான நிலையில் வேறு வார்டுக்கு மாற்றி உள்ளார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரம் வந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்கள். என் பெரியம்மா இறந்துவிட்டார் என்று குற்றம்சாட்டினார். இறந்தவர்கள் யார் யார் என்பது குறித்து தெளிவான விவரத்தை அவர் கூறவில்லை.

இந்த விவாகரம் குறித்து இதுவரை திருப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கங்கள் வெளியாகவில்லை. வெளியான பின்னரே முழு உண்மை நிலவரம் தெரியவரும்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications