பந்தவாய் வந்திறங்கிய நித்யானந்தா! பல்லடத்தில் நடந்த பஞ்சாயத்து! உற்று பார்த்தால்..கடைசியில் ட்விஸ்ட்
திருப்பூர் : கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருக்கும் பிரபல சாமியார் நித்யனந்த திருப்பூரில் உலா வந்ததாக இணையதளங்களில் தகவல் பரவியது. விசாரித்த போதுதான் அது நித்யானந்தா இல்லை. அது நித்யானந்தா போலவே இருக்கும் லோக்கல் சாமியார் என்பது.
பண மோசடி, பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி சாமியார் நித்தியானந்தா கடந்த சில வருடங்களாக தலைமறைவாகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் ஒரு குட்டி தீவு விலைக்கு வாங்கி அதற்கு கைலாச என பெயரிட்டு அங்கே வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், கடந்த குரு பூர்ணிமா அன்று நேரலையில் பேசினார். பின்னர் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரலையில் தோன்றியுள்ள நித்தி பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார்.

நித்யனந்தா
இந்நிலையில் நித்யனந்தா திருப்பூரில் உலா வந்ததாக இணையதளங்களில் தகவல் பரவியது. விசாரித்த போதுதான் அது நித்யானந்தா இல்லை. அது நித்யானந்தா போலவே இருக்கும் லோக்கல் சாமியார் என்பது. பார்ப்பதற்கு ஒரு சாயலில் நித்தியானந்தா போலவே தோற்றம் அளித்த அவரது பெயர் பாஸ்கர் ஆனந்தா கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரமங்கள் உள்ளது.

ஜெராக்ஸ் சாமியார்
நித்தியானந்தா போலவே கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமங்களை அமைத்து ஆன்மீகப் பணி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்க சுமார் ஒன்றரை கோடி ரூபாயை அட்வான்ஸ் ஆக கொடுத்து இருக்கிறார் பாஸ்கரானந்தா. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தினை பாஸ்கரானந்தா செல்வகுமார் இடம் இருந்து குத்தகைக்கு பெற்றிருக்கிறார்.

போலீசில் புகார்
இந்த நிலையில் கடந்த வாரம் அந்த இடத்தில் கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில் இருந்து 25 சவரன் தங்க நகைகள் மாயமானதாகவும் அதனை மீட்டு தர கோடி பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சுவாமி புகார் அளித்திருந்தார். இதனையே அவர் கட்டி வந்த ஆசிரமம் முழுவதும் இடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் இதை அடுத்து பல்லடம் காவல் நிலையத்திற்கு பக்தர்களுடன் சொகுசு காரில் வந்திறங்கிய பாஸ்கர் ஆனந்தா புகார் அளித்தார்.

தற்கொலை மிரட்டல்
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,"சம்பந்தமே இல்லாமல் தனது ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பார்ப்பதற்கு நித்தியானந்தா போலவே இருப்பதால் அவர் ஆசிரமம் என நினைத்து என் ஆசிரமம் இது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்"எனவும் மிரட்டல் விடுத்திருக்கிறார் பாஸ்கரானந்தா. இந்நிலையில் காவல் நிலையத்திற்கு நித்தியானந்தா வந்திருக்கிறார் என்ற தகவல் பரவியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications