திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"50,000+".. 27-ம் தேதி ஸ்டாலின் வீட்டுக்கு போகப்போகிறார்.. அடுத்து எடப்பாடிதான்: பொள்ளாச்சி ஜெயராமன்

இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றி பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

திருப்பூர்: விரைவில் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று அதிமுகவின் மூத்த தலைவர் பொள்ளாசி ஜெயராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. நடக்க போகும் இடைத்தேர்தலில் வெல்வது அதிமுகதான் என்றும் உறுதியாக சொல்கிறார்.

விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. திமுக கட்சியானது, தன்னுடைய கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்குவதாக தெரிவித்து உள்ளது..

எனினும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக இப்போதே களத்தில் தீவிரமாக குதித்துவிட்டது..

பொள்ளாச்சி.. கொடநாடு கொள்ளை! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் செக்! எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் பேச்சுபொள்ளாச்சி.. கொடநாடு கொள்ளை! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் செக்! எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் பேச்சு

 முகாம் சீனியர்கள்

முகாம் சீனியர்கள்

குறிப்பாக, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சருமான முத்துச்சாமி மற்றும் நகராட்சி துறை அமைச்சர் கேஎன் நேரு ஆகியோர் நிர்வாகிகளுடன் வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஈரோடு பெரியார் நகரில் இருந்து, அதிரடி பிரச்சாரம் ஆரம்பமாகி உள்ளது. இனி அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் முகாமிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஸ்க்

ரிஸ்க்

அதேபோல, இலை கிடைக்காத விவகாரத்தில், கூட்டணிக்கே தொகுதியை ஒதுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவே நேரடியாக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கு நடுவில் ஓபிஎஸ்ஸும் களமிறங்குகிறார்.. மநீம, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், இப்படி எல்லாருமே இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள்.. பாஜகவும் தன்பங்குக்கு வேகத்தை கூட்டி வருகிறது.. அதனால், இந்த முறை, இடைத்தேர்தல் களத்தில் 5 முனை போட்டி எழலாம் என்று தெரிகிறது.. இதில் மற்ற கட்சிகளை காட்டிலும், அதிக ரிஸ்க் எடுப்பது எடப்பாடி பழனிசாமியே என்கிறார்கள்.

 துணிச்சல் - பலம்

துணிச்சல் - பலம்

வழக்கம்போல் இந்த முடிவையும் துணிச்சலாக எடப்பாடி எடுத்துள்ளதாக சொல்லப்பட்டாலும், சின்னம் இல்லாத நிலைமையில், உட்கட்சி பூசலில், பாஜகவுடன் தற்சமயம் நல்லிணக்கம் இல்லாத சூழலில், திமுகவின் அசுர பலத்திற்கு நடுவில், எடப்பாடி பழனிசாமி களமிறங்குவதால், நெருக்கடிகளும், சிக்கல்களும் கூடியுள்ளதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராவார் என்ற நம்பிக்கையுடன் சொல்கிறார் மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

திருப்பூர் சூசையாபுரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகரும், எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியபோது, "எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பலதரப்பட்ட மக்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் நான்கரை வருட காலம் நிறைவேற்றி தமிழக மக்களுடைய நெஞ்சத்தில் இடம் பிடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் மறுபடிம் முதல்வராக வருவார்.

English summary
Can Edapadi Palanisamy win by a margin of 50000 votes and what does pollachi jayaraman say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X