தாராபுரத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்.. கட்டுப்பாடுகள் என்னென்ன? தவெக அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரத்தில் விஜய் நாளை மாலை 3.00 மணி அளவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு இல்லாதவர்களுக்கு நிகழ்ச்சியில் அனுமதி கிடையாது எனவும், அனுமதி அளிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தவெக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் களை கட்டியுள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் என 5 முனை போட்டி நிலவும் நிலையில் கட்சி நிர்வாகிகள் முதல் தலைவர்கள் வரை சுற்றி சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வெற்றி பெற வியூகமும் அமைத்து வருகிறார்கள்.

Vijay

தாராபுரத்தில் விஜய் நாளை பிரசாரம்

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யும் இந்த இரு தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொண்ட விஜய் திமுகவை விமர்சித்து பேசினார். இந்நிலையில் நாளை தாராபுரம் தொகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சித்ராவுத்தன்பாளையம் மாருதி நகரில் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

மாலை 3 மணியளவில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து தவெக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (30.09.2026, புதன்கிழமை), திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சித்ராவுத்தன்பாளையம் கிராமம், மாருதி நகரில் மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே

QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+