சுண்டைக்காய் விலை என்னனு கேட்டா விலைவாசி குறைஞ்சிடுமா? நிர்மலா சீதாராமனை சீண்டிய ப.சிதம்பரம்!
திருப்பூர் : சென்னை மயிலாப்பூரில் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை என்ன? என்று கேட்டால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காய்கறி வாங்கினார். நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் செல்லும் வழியில் மயிலாப்பூரில் தெருவோர கடையில் காய்கறி வாங்கினார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ நிர்மலா சீதாராமனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. சென்னை மயிலாப்பூர் மார்கெட்டில் நிதியமைச்சர் காய்கறி வாங்கினார். அங்கு அவர் காய்கறி வியாபாரிகளுடனும் உள்ளூர்வாசிகளுடனும் உரையாடினார் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் சக்கரவல்லி கிழங்கு, பாகற்காய் போன்ற காய்கறிகளை வாங்கிய நிலையில் பலரும் அதனை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை என்ன? என்று கேட்டால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார்.

ப.சிதம்பரம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சென்னை மயிலாப்பூரில் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை என்ன? என்று கேட்டால் மட்டும் இதற்கெல்லாம் தீர்வாகாது.

பொருளாதாரம் தெரியாது
பொருளாதாரம் பற்றி எனக்கு தெரியாது என நகைச்சுவையாக பேசிய அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றது. ஜப்பான் நாட்டுடன் செய்த ஒப்பந்தப்படி டாலருக்கு நிகராக நமது ரூபாயை நிலையாக வைத்துக் கொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாலரை கையிருப்பில் சீராக வைத்துக் கொள்ள ஸ்வாப் செய்யும் அளவுக்கு செல்ல வேண்டியது இல்லை. தற்போது கூட ரிசர்வ் வங்கியில் 500 பில்லியன் டாலர் அளவிற்கு கையிருப்பு உள்ளது.

கரன்சி ஸ்வாப்
ஆனால் கரன்சி ஸ்வாப் அளவுக்கு நாம் தள்ளப்பட மாட்டோம் இந்தியாவின் வளர்ச்சி 6.5 என உலக வங்கி கூறிய பிறகு அதை அரை மனதோடு மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. வளர்ச்சி குறைந்து விலைவாசி உயரும். அதை ரிசர்வ் வங்கி கவர்னரும் ஒப்புக்கொள்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்" என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications