திமுக தேர்தல் அறிக்கை தான் இந்த முறையும் "ஹீரோ.." திருப்பூரில் அடித்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பல்லடத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், எல்லாத் தேர்தல்களிலும் திமுக தான் ஹீரோ இந்த முறையும் அப்படி இருக்கும் என்று தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் பல முக்கிய வாக்குறுதிகள் இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதன்படி திமுக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அடுத்த காரணம்பேட்டையில் நடைபெறுகிறது. 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் இந்த மாநாட்டில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி எம்.பியுமான கனிமொழி தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இங்குக் கூடியுள்ள மகளிர் கூட்டத்தைப் பார்த்தாலே பவர்புல்லாக இருக்கிறது எனச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார். மேலும், பெண்கள் பவரில் திமுக மீண்டும் பவருக்கு வருகிறது என்பது உறுதியாகியுள்ளது என்றார்.
மேலும், எப்போதும் தேர்தல்களில் திமுக தேர்தல் அறிக்கை தான் ஹீரோ.. அதை தயாரிக்கும் பொறுப்பு இந்த முறை கனிமொழிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருந்தார் என்ற முதல்வர் ஸ்டாலின், அதில் திமுக 100% வெற்றியைப் பெற்றதாகவும் இந்த முறையும் அதுவே நடைபெறுவது உறுதி என்றார்.
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் சில இடங்களில் பெண்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. ஆனால், தமிழ்நாட்டில் ஐபோனை தயாரிப்பதே பெண்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை உருவாக்கியவரே கருணாநிதி தான், இன்று நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகப் பெண்கள் மேயர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்












Click it and Unblock the Notifications