குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. திருப்பூர், திருவாரூர் மக்களே.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில், பொது வினியோகத்திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோகத்திட்ட சிறப்பு பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடக்கிறது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருவாரூர் வட்டம், கல்யாணசுந்தரபுரம் கிராமத்தில், திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை கிராமத்தில், திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலும், குடவாசல் வட்டம், நெடுஞ்சேரி கிராமத்தில், திருவாரூர் பொது வினியோகத்திட்டம் துணைப்பதிவாளர், தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

வலங்கைமான் வட்டம், சாரநத்தம் கிராமத்தில், திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி வட்டம், கோட்டூர் தோட்டம் கிராமத்தில், மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம், மருதவனம் கிராமத்தில், திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
நீடாமங்கலம் வட்டம், ஒளிமதி கிராமத்தில், மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டம், பாலக்குறிச்சி கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டம், தேவதானம் கிராமத்தில், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டம் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது.. எனவே, தொடர்புடைய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன் பெறலாம்.
அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் அலுவலர்களிடம் அளித்து பயன் பெறலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. முகாமில் அனைத்து குடிமைபொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அவினாசி தாலுகா பட்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் தாலுகா மணக்கடவு தோ்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் தாலுகா மூத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில்முகாம் நடக்கிறது.
மடத்துக்குளம் தாலுகா பாப்பாங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் தாலுகா பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக இ-சேவை மையம், திருப்பூர் வடக்கு தாலுகா கணக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் தெற்கு தாலுகா குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடுமலை தாலுகா சின்னவீரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி விருமாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைளை நிவர்த்தி செய்யலாம்" இவ்வாறு கூறியுள்ளார். திருப்பூர், திருவாரூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் பொதுவினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முழு தகவல்களை தாலுகா அலுவலகங்களில் அறியலாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications