ரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு? பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பூர்: 10 ரூபாய் நாணயங்களை வாங்கவேண்டாம் என அரசு பேருந்து நடத்துனர்களுக்கு திருப்பூர் மாநகர போக்குவரத்து கிளை மேலாளர் உத்தரவிட்டது போன்ற புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப்களில் பரவிவருகிறது. ஏற்கனவே மக்கள் வதந்தி காரணமாக 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வந்த நிலையில் அந்த வதந்தி இப்போது தான் ஓய்ந்துள்ளது. இந்த சூழலில் போக்குவரத்து மேலாளர் உத்தரவிட்டுள்ளதாக பரவிய புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவிய வாட்ஸ்அப் வதந்தியால் நாடு முழுவதும் மக்கள் 10 ரூபாய் நாணயங்களை கடந்த ஆண்டு வாங்க மறுத்தனர். இது முற்றிலும் வதந்தி என்றும் எல்லா வகையான 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.

எனினும் பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் பிரச்னை தீவிரமானது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் சட்ட விரோதம் என எச்சரிக்கை விடப்பட்டது. இதன் பிறகு வதந்திகள் குறைந்து மக்கள் மெல்ல மெல்ல 10 ரூபாய் நாணயங்களை வாங்க ஆரம்பித்தனர். இப்போது எந்த பிரச்னையும் இல்லாமல் 10 ரூபாய் நாணயம் தமிழகத்தில் புழகத்தில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் திருப்பூர் கிளை போக்குரத்து மேலாளர் பேருந்து நடத்துனர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது போன்ற புகைப்படம் வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. அந்த வாட்ஸ் அப் பதிவில், "நடத்துனர்கள் பேருந்தில் பணிபுரியும் போது பயணிகள் கொடுக்கும் ரூ.10 நாணங்களை முடிந்தவரை தவிர்க்கவும்.தவறும் பட்சத்தில் பயணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும் போது ரூ.10 நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் அனைத்து நடனத்துனர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நகலை பார்த்து பேருந்து நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்தால்தான் உண்மை நிலை தெரியும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications