திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொய்.. தமிழ்நாட்டில் "வங்கதேசம்.." சி.ஏ.ஏ. ரொம்ப முக்கியம்.. கொதிக்கும் காடேஸ்வரா.. தடதட கோரிக்கை

இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணி, சிஏஏ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்கிறார்

Google Oneindia Tamil News

திருப்பூர்: சிஏஏ சட்டம் கட்டாயம் அமலாக்கப்பட வேண்டும் என்று, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது தொடர்பாக தனக்கு தோன்றிய சில காரணங்களையும் அவர் அடுக்கியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை இந்து முன்னணி தொடர்ந்து வரவேற்று வருகிறது.. கடந்த 2 வருடங்களுக்கு முன்பேயே, பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்‌ஷாவுக்கும் இந்து முன்னணி பலமுறை தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்தது.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த எந்த மதத்தினருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, அவர்களை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் இந்து முன்னணி தொடர்ந்து கூறியபடி உள்ளது.

இன்னும் 6 மாசம் அவகாசம் கொடுங்க.. சிஏஏ சட்ட விதிகளை இறுதி செய்ய உள்துறை அமைச்சகம் கோரிக்கை இன்னும் 6 மாசம் அவகாசம் கொடுங்க.. சிஏஏ சட்ட விதிகளை இறுதி செய்ய உள்துறை அமைச்சகம் கோரிக்கை

 காடேஸ்வரா சுப்ரமணி

காடேஸ்வரா சுப்ரமணி

அதுமட்டுமல்ல, "சில ஊடகங்களும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை மட்டுமே முன்னிலை படுத்துகின்றன என்றும், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நடைபெறும் ஊர்வலத்தையோ, பிரச்சார கூட்டங்களையோ அவை கண்டுகொள்வதிலலை, பொதுமக்கள் மனதில் இந்த சட்டம் குறித்த எதிர்மறையான கருத்துகளை பதிய வைக்கவே சில அரசியல் கட்சிகள் முயல்கின்றன என்றும், குற்றஞ்சாட்டியிருந்த இந்து முன்னணி, இதனை தடுக்கும் வகையில் இந்து முன்னணி பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறியிருந்தது.

காடேஸ்வரா

காடேஸ்வரா

அதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் ஆங்காங்கே பேரணிகளும் நடத்தப்பட்டன.. அந்த பேரணிகளில், குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகள் என்ற பெயரில் சில விஷயங்களை அச்சடித்து, துண்டு பிரசுரமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.. இந்நிலையில், சிஏஏ சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி அழுத்தமாக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்த, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

 பொய் பொய்

பொய் பொய்

"தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நபர்கள் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். பல வழியிலும், ஊடுருவல் நடக்கிறது என்று தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அது ஒரு பொய் குற்றச்சாட்டு என்றும் சொல்கிறது.. கோவை விமான நிலையத்தில் அன்வர் உசேன் என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கனவே திருப்பூரில் தங்கி வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்துள்ளது..

 போலி பாஸ்போர்ட்

போலி பாஸ்போர்ட்

மேலும், அவர் பெங்களூரு சென்று மேற்கு வங்க முகவரியில் ஆதார், பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அரபு நாடும் சென்றுள்ளார். மீண்டும் திருப்பூருக்கு வேலைக்கு வர போலி பாஸ்போர்ட்டில் வந்தபோது போலீசிடம் பிடிபட்டார். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இதுபோன்று மீண்டும் நிகழாமல் தவிர்க்க, மத்திய அரசு சிஏஏ சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை கண்டறிந்து நாடு கடத்த வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Hindu Munnani kadeswara demands, immediate implementation of CAA, why
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X