பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்துங்க.. திருப்பூர் உட்பட தமிழகத்தை ஸ்டன் ஆக்கிய அரசு ஊழியர்கள்
திருப்பூர்: உடனடியாக அரசு மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்டப்படவில்லை என்றால் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இதனால் அரசு அலுவலகங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது என்று அரசு ஊழியர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை அரசு ஊழியர்கள் நடத்திய நிலையில், அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைகள் என்னென்ன?
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 1.4.2003 முதல் ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை, அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் 22 ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றன.

மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
பழைய ஓய்வூதியம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைப்பதாகவும். இந்த குழுவின் அறிக்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், அப்படி செய்யாமல் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்து கால அவகாசம் வழங்கியதும், அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை தந்து வருகிறது.
எனவே புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்..

தமிழகம் முழுவதும் போராட்டம்
இன்றுகூட தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறையில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 7வது ஊதிய குழுவில் நிதி பலன்களை அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு போராடியவர்களுக்கும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
இன்று கரூர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்..
அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பி மறியலில் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அகவிலைப்படி
இதில் கோவை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ச.ஜெகநாதன் பேசும்போது, "பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை.. 7வது ஊதியக்குழு நிலுவையாக உள்ள 21 மாத நிலுவைத் தொகையை வழங்கவில்லை.. தொடர்ந்து போராடி வருகிறோம். கைது செய்யப்படுகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
எங்களுக்கான அகவிலை படியை கூட போராடி வாங்க வேண்டிய சூழலில் உள்ளோம். கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு, 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால் பெற்றோரை இழந்த வாரிசுகள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.. 30 வருடங்களாக பணியாற்றிய சத்துணவு ஊழியர்களுக்கு வெறும் ரூ.2,000 மட்டுமே பென்சனாக வழங்கப்படுகிறது.
ஜனவரியில் ஸ்டிரைக்
14வது மாநில மாநாட்டின் போது அரசு ஊழியர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்யப் போகிறோம் என்றார்கள்.. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் இப்போது வரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. உடனடியாக அரசு மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்டப்படவில்லை என்றால் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இதனால் அரசு அலுவலகங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications